For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றோர் தேர்தலில் போட்டியிட முடியாது!

By Mathi
Google Oneindia Tamil News

MPs, MLAs shall stand disqualified from the date of conviction: SC
டெல்லி: குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற பின்னரும் கூட எம்.எல்.ஏ, எம்.பி. பதவிகளில் நீடித்துக் கொண்டிருப்போருக்கு வேட்டு வைக்கும் வகையில் உச்சநீதிமன்றம் அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தாமஸ் லில்லி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவுகளுக்கு சில விளக்கங்களைக் கொடுத்தது.

இதன்படி, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற எம்.எல்.ஏ, எம்.பிக்களின் பதவிகள் பறிக்கப்பட வேண்டும். இந்த எம்.எல்.ஏ, எம்.பி.க்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் தகுதியிழப்பு சட்டப் பிரிவு நீக்கப்படுகிறது. கீழ் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்தாலும் அவர்கள் பதவியில் நீடிக்கக் கூடாது்.

மேலும் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெற்றோர் தேர்தலில் போட்டியிட முடியாது. அவர்கள் தேர்தலில் போட்டியிட தகுதி இழந்தவராக கருதப்படுவர். அதேபோல் சிறையில் இருந்தபடியே தேர்தலில் இனி போட்டியிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதில் ஏற்கெனவே தண்டனை பெற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கும் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களுக்கு விலக்கு அளிப்பதாகவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் பல எம்.பிக்களின் பதவிகளும் பல மாநிலங்களில் பல எம்.எல்.ஏக்களின் பதவிகளும் பறிபோகக் கூட அபாயம் உருவாகிறது.

English summary
In a landmark ruling that can cleanse Indian politics of criminal elements, the Supreme Court struck down the legal provision that protects a lawmaker from disqualification even after conviction in a criminal case. The Supreme Court ruled that MPs or MLAs shall stand disqualified from holding the membership of the house from the date of conviction in a trial court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X