For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொருளாதார மந்தத்திலும் எம்பிஏ பட்டதாரிகளை 'அள்ளிப் போடும்' காக்னிசன்ட், கேப்ஜெமினி, விப்ரோ!

By Chakra
Google Oneindia Tamil News

Top recruiters like Cognizant, Capgemini, Wipro and others go all out to attract talent
பெங்களூர்: பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும் காக்னிசன்ட், கேப்ஜெமினி, விப்ரோ உள்ளிட்ட சாப்ட்வேர் நிறுவனங்கள் இந்தியாவின் முன்னணி பொருளாதார கல்வி நிறுவனங்களில் இருந்து எம்பிஏ பட்டதாரிகளை வேலைக்குச் சேர்ப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

நாட்டில் உள்ள 21 முன்னணி பொருளாதாரக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களை கேம்பசிலேயே அள்ளிக் கொண்டு வருவதில் காக்னிசன்ட் நிறுவனம் தான் முன்னணியில் உள்ளது.

25 சாப்ட்வேர் என்ஜினியர்களை பணியில் சேர்த்தால் ஒரு எம்பிஏ பட்டதாரியை பணியில் சேர்க்கிறது காங்னிசன்ட்.

2013ம் ஆண்டில் தேறி வரப் போகும் 200 எம்பிஏ பட்டதாரிகளை கேம்பசிலேயே வைத்து பணியில் சேர்த்துள்ளது காக்னிசன்ட்.

இதில் இரண்டாவது இடத்தில் இருப்பது கேப்ஜெமினி. அதே போல விப்ரோவும் எம்பிஏ பட்டதாரிகளை குறி வைத்து வருகிறது.

இவர்களை தொழில் ஆலோசனை, வாடிக்கையாளர் உறவு நிர்வாகம், தொழில் வளர்ச்சி, புதிய தொழில் வாய்ப்புகள் குறித்த மதிப்பீடு, வணிக ஒருங்கிணைப்பு உள்ளிட்ட பிரிவுகளில் பணிக்கு அமர்த்தி வருகின்றன இந்த நிறுவனங்கள்.

கோல்ட்மென் சாக்ஸ் போன்ற நிறுவனங்கள் பேஸ்புக், லிங்ட்இன் போன்ற சமூக வளைத்தளங்கள் மூலம் முன்னணி பொருளாதார கல்வி நிறுவனங்களில் பயிலும் எம்பிஏ மாணவர்களுக்கு வலை வீசி வருகின்றன.

English summary
The IT services sector is perhaps the worst hit by global economic turbulence over the past few years. But when one company from this industry hires more MBAs from 21 top B-schools than any other company across all sectors, you know it is doing something right.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X