For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளவரசன் பிரேத பரிசோதனையை அத்துமீறி படம் பிடித்த அந்நியர்கள்: மருத்துவர்கள் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

Ilavarasan: Why outsiders in mortuary during autopsy?
சென்னை: இளவரசனின் பிரேதப் பரிசோதனையில் அனுமதியில்லாத வேறு அந்நியர்கள் சிலர் இருந்ததாகவும், சில காவலர்கள் முறைகேடாக பிரேத பரிசோதனையை பதிவு செய்ததாகவும் பிரேத பைசோதனை வீடியோவைப் பார்த்த மருத்துவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

இளவரசன் பிரேத பரிசோதனையைப் பார்வையிட்ட மருத்துவர்கள் தங்கள் அறிக்கையை தனித்தனியாக சமர்ப்பித்துள்ளனர். அதில், ஜிப்மர் ஆச்பத்திரியின் கூடுதல் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.ஜே.இ.அம்புரோஸ் மற்றும் தடய அறிவியல் துறை இணை பேராசிரியர் சாகா ஆகியோர் அளித்த அறிக்கையில், பிரேத பரிசோதனை அறையில் அங்கீகரிக்கப் படாத பலர் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து அவர்கள் சமர்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘ பிரேத பரிசோதனையின் போது அதை பதிவு செய்ய அங்கீகரிக்கப் பட்டவர்களைத் தவிர, சில வக்கீல்கள், அரசியல்வாதிகள், போலீசார் மற்றும் சிலர் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்' எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிரேத பரிசோதனையை சில காவலர்கள் தங்கள் செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளனர் அவர்கள்.

English summary
Most of the experts who viewed the video of the autopsy of Ilavarasan, along with two judges of the Madras High Court on Tuesday, said that a second autopsy was not required as the main injuries had already been covered, a report in The New Indian Express said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X