For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு விதித்த கெடு இன்றுடன் முடிவு! 7 பேரும் நீக்கம்?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் விளக்கம் தருவதற்காக அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அளித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் 7 பேரும் பதிலளிக்காததால் அனைவரும் தேமுதிகவில் இருந்து நீக்கப்படுவார்களா? என்ற பரபரப்பு நிலவுகிறது.

தேமுதிகவில் இருந்து மாஃபா பாண்டியராஜன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன், சுந்தர்ராஜன், அருண் பாண்டியன், சுரேஷ்குமார், சாந்தி ஆகிய 7 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியாளர்களாக செயல்பட்டு வந்தனர். ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு வாக்களிக்காமல் அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளருக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.

Today deadline for rebel DMDK Mlas

இதைத் தொடர்ந்து 7 எம்.எல்.ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு கடந்த மாதம் 28-ந் தேதி விஜயகாந்த் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸில் 7 பேரும் சஸ்பென்ட் செய்யப்படுவதாகவும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அக்கடிதத்தில் விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேரும் விஜயகாந்த் நோட்டீஸுக்கு பதில் அனுப்பவில்லை. "எங்கள் மீது என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்" என்பது 7 பேரின் கருத்தாக இருக்கிறது.

இதனால் 7 எம்.எல்.ஏக்களையும் நீக்கி அதிரடி உத்தரவை விஜயகாந்த் பிறப்பிப்பாரா என்ற பரபரப்பு நிலவுகிறது.

English summary
Today is the last day for rebel DMDK Mlas to reply the party leader Vijayakanth's explanation notice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X