For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 நாள் அலையணும் பரவாயில்லையா?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: உலக அளவில் சுகாதாரம், கல்வி, உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பெற அதிக அளவில் லஞ்சம் கொடுக்கவேண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போலீஸ், நீதித்துறையை தொடர்ந்து அரசியல் கட்சிகளே அதிக லஞ்சம் புழங்கும் மையமாக உள்ளன.

உலகில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழல் நிறைந்தவை தான் என 86 சதவீதம் இந்தியர்கள் நம்புவதாக சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் அம்பலமாகி உள்ளது.

"சர்வதேச ஊழல் அளவீடு 2013" என்ற தலைப்பில் உலகம் முழுவதிலும் உள்ள 107 நாடுகளில் 114,270 மக்களிடம் ஒரு வெளிப்படையான ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்கதையாகும் ஊழல்

தொடர்கதையாகும் ஊழல்

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமின்றி நாடு முழுவதும் பொது மக்களின் நலன் குறைவாகவே உள்ளது எனவும், ஊழல் தொடர்பான பிரச்னைகளை அரசு தொடர்கதையாக்கிக் கொண்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

பொதுப்பணியில் அதிகம்

பொதுப்பணியில் அதிகம்

பொது பணித்துறை மற்றும் சேவை துறை போன்ற அரசுத்துறைகளில் பணியாற்றுபவர்களில் இரண்டில் ஒருவர், அதாவது 54 சதவீதம் பேர் கடந்த 12 மாதங்களில் அதிகளவில் லஞ்சம் வாங்குபவர்களாக உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் வெளியாகி உள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இதிலும் இந்தியா தான் முதலிடம்.

காவல்துறை, நீதித்துறை

காவல்துறை, நீதித்துறை

உலக நாடுகளில் 27 சதவீதம் அரசுத்துறை பணியாளர்களே லஞ்சம் வாங்குகின்றனர். உலக அளவில் காவல் துறையில் 62 சதவீதமும், கல்வி நிறுவனங்களில் 48 சதவீதமும், நிலம் தொடர்பான கொடுக்கல் வாங்கலில் 38 சதவீதமும், இந்தியாவின் நீதித்துறையில் 36 சதவீதமும் லஞ்சம் உள்ளது.

2 ஆண்டுகளில் அதிகம்

2 ஆண்டுகளில் அதிகம்

இதில் உலக நாடுகளின் சராசரி ஊழல் அளவான 53 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் ஊழலில் அளவு அதிகரித்துள்ளதாக 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நம்புவது தெரிய வந்துள்ளது.

யாருக்கும் அக்கறையில்லை

யாருக்கும் அக்கறையில்லை

இந்தியாவை வல்லரசாக்குவோம் என கூறுபவர்கள் மக்களின் நலனில் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை எனவும் ருக்ஷனா தெரிவித்துள்ளார்.

அரசு என்ன செய்யுது?

அரசு என்ன செய்யுது?

மேலும் 68 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள், ஊழல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு எதிராக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவே நம்புவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள்

அரசியல் கட்சிகள்

போலீஸ், நீதித்துறையை தொடர்ந்து அரசியல் கட்சிகளே அதிக லஞ்சம் புழங்கும் மையமாக உள்ளன. இந்தியாவில் 86 சதவீதம் மக்கள் அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழலில் ஈடுபடுவதாக நம்புகின்றனர்.

அடிப்படை உரிமைகளைப் பெற

அடிப்படை உரிமைகளைப் பெற

ஊழல் என்பது பொது மக்களிடம் இருந்து தான் துவங்குவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகளை பெறுவதற்காகவே அதிகளவில் லஞ்சம் கொடுக்கப்படுகிறது. சுகாதாரம், பசி, கல்வி நுழைவு கட்டணம் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக கூடுதல் லஞ்சம் கொடுக்கப்படுகிறது. அவ்வளவு ஏன் ஆதார் அடையாள அட்டை பெறுவதற்கு கூட லஞ்சம் கொடுக்கப்பட்ட சம்பவங்கள் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன.

ஆண்களா? பெண்களா?

ஆண்களா? பெண்களா?

உலக அளவில் 28 சதவீதம் ஆண்களும், 25 சதவீதம் பெண்களும் லஞ்சம் அளித்து வருகின்றனர். நோபாள், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களை விட மிக அதிக அளவில் ஆண்கள் லஞ்சம் அளித்து வருகின்றனர்.

கொலம்பியாவில் ஆண்கள்

கொலம்பியாவில் ஆண்கள்

இதற்கு மாறாக கொலம்பியாவில் 27 சதவீதம் பெண்களும், 16 சதவீதம் ஆண்களும் லஞ்சம் அளிக்கின்றனர். ஐரோப்பாவில் தகவல் தொடர்பு மற்றம் அரசியல் கட்சிகளே அதிகளவில் லஞ்சம் பெறுகின்றனர். 5 சதவீதம் மக்கள் லஞ்சம் அளித்து வருகின்றனர்.

3 நாள் அலையணும் பரவாயில்லையா?

3 நாள் அலையணும் பரவாயில்லையா?

எந்த ஒரு சர்ட்டிபிகேட் வாங்கப்போனாலும் முக்கியமான பேப்பர் இல்லையே என்று திருப்பி அனுப்பும் அதிகாரிகள்தான் இருக்கின்றனர். பணம் என்ற மூன்றெழுத்து முக்கியமான ஆவணத்தை காட்டிவிட்டால் வேறு எதுவும் தேவையில்லை. உடனே காரியம் நடந்துவிடும். இல்லாவிட்டால் வேலை மெனக்கெட்டு 3 நாள் அலையவேண்டும். இதற்காகவே பலரும் லஞ்சம் கொடுக்க முன்வருகின்றனர் என்கின்றனர் லஞ்சம் கொடுத்து அனுபவப்பட்டவர்கள்.

English summary
A global survey to gauge the extent of worldwide corruption has pegged India high up on the world scales and sent out a harsh message to the country's political parties over their inability to curb the problem. Transparency International's annual 'Global Corruption Barometer 2013', which surveyed 114,270 people in 107 countries, found a whopping 70 per cent of those surveyed in India believed that corruption had increased in the last two years, compared to the global average of 53 per cent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X