For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிகரெட்டை விடுவதற்காக தனக்குத் தானே ‘ஹெல்மெட் பூட்டு’ போட்டு கொண்ட துருக்கி மனிதர்

Google Oneindia Tamil News

அங்காரா: எப்படி சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விடுவது என வாயில் சிகரெ வைத்த படியே யோசிக்கும் அன்பர்களுக்கு மத்தியில், தனக்கு தானே விஷேச ஹெல்மெட் தயாரித்து, அதை நாள் முழுவதும் தலையிலேயே மாட்டி புகைப் பழக்கத்திலிருந்து மீண்டு வந்திருக்கிறார் ஒரு புத்திசாலி மனிதர்.

மனிதன் சுயக்கட்டுப்பாட்டோடு ஒரு தீயப் பழக்கத்தை விட்டு விட வேண்டும் என மனதில் நினைத்தாலே, நிச்சயம் அதில் வெற்றி பெற்று விட முடியும் என்பதற்கு உதாரண புருஷனாக விளங்குகிறார் இந்த துருக்கி மனிதர்.

வயர் ஹெல்மெட்...

வயர் ஹெல்மெட்...

இப்ராஹிம் யூசுல் என்ற 42 வயது துருக்கி மனிதர் கண்டுபிடித்தது தான் இந்த புகை பிடிப்பதைத் தடுக்கும் ஹெல்மெட்.

புகைக்கு அடிமை...

புகைக்கு அடிமை...

இவர் கடந்த 26 வருடங்களாக, தினமும் 2 பாக்கெட் சிகரெட் பிடிக்குமளவிற்கு, புகைக்கு அடிமையாக இருந்து வந்துள்ளார். அதில் மீள எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டும் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்ததாம்.

தோற்றுப் போன சபதங்கள்...

தோற்றுப் போன சபதங்கள்...

தனது பிறந்த நாள், தனது மூன்று பிள்ளைகளின் பிறந்த நாள், மனைவியின் பிறந்த நாள், அவரது மணநாள் மறும் புத்தாண்டு என ஒரு நாள் விடாமல் சிகரெட்டை விட்டு விடப் போவதாகச் சபதம் எடுப்பாராம் இப்ராஹிம். ஆனால்,அந்த மன உறுதியெல்லாம் நான்கைந்து நாட்களில் காணாமல் போய்விடுமாம்.

தானே தயாரித்தது...

தானே தயாரித்தது...

என்ன செய்யலாம் என ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு கண்டறிந்தது தானாம் இந்த வயர் ஹெல்மெட். தானே அதனை டிசைன் செய்துள்ளார் இப்ராஹிம்.

ஹெல்மெட் மனிதர்...

ஹெல்மெட் மனிதர்...

இந்த வயர் ஹெல்மெட்டை காலையில் எழுந்ததும் தலையில் மாட்டிக் கொள்வாராம் இப்ராஹிம். பின் இரவுப் படுக்கப் போகும் போது தான் கழட்டி வைப்பாராம்.

சாப்பிட மட்டும் பர்மிஷன்....

சாப்பிட மட்டும் பர்மிஷன்....

இந்த ஹெல்மெட்டிற்கு இரண்டு சாவிகள் உண்டாம். ஒன்று அவரது மனைவியிடமும், மற்றொன்ரு அவரது மூத்தமகளிடமும் இருக்குமாம். சாப்பிடும் போது மட்டும் அவர்கள் திறந்து விடுவார்களாம்.

குடும்ப வைராக்கியம்...

குடும்ப வைராக்கியம்...

இப்ராஹிம்மின் தந்தை நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப் பட்டு காலமானாராம். தானும் அதுபோலவே, தனது குடும்பத்தை தவிக்க விட்டு விடக் கூடாது என்பதாலேயே இந்த ஹெல்மெட் கண்டுபிடித்தாராம். பொது இடங்களில் இந்த் ஹெல்மெட்டை அணிந்து செல்ல ஆரம்பத்தில் கொஞ்சம் அசிங்கமாக இருந்ததாம் இப்ராஹிமுக்கு, ஆனால் இப்போது வெட்கமும் குறைந்து விட்டதாம், புகைப் பிடிக்கும் பழக்கமும் குறைந்து விட்டதாம்.

English summary
If you've ever tried to quit smoking, you may be able to relate to a man from Turkey who has created a special wire helmet to prevent a cigarette from entering his mouth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X