For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வினோதினி வழக்கு: குற்றவாளியிடம் 115 கேள்வி கேட்ட நீதிபதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Accused in acid attack case examined
காரைக்கால்: காரைக்கால் வினோதினியை ஆசிட் வீசி கொலை செய்த வழக்கில் கைதாகியுள்ள குற்றவாளி சுரேஷ் இடம் நேற்று ஒரே நாளில் 115 கேள்விகளை கேட்டார் நீதிபதி.

காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி திருவேட்டக்குடியைச் சேர்ந்தவர் அப்பு என்கிற சுரேஷ் (28). இவர் எம்எம்ஜி நகரில் வசித்து வந்த இன்ஜினியர் வினோதினியை ஒரு தலையாக காதலித்தார்.

அவரது காதலை ஏற்க வினோதினி மறுத்துவிட்டதால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் மீது ஆசிட் வீசினார் சுரேஷ். இதில் படுகாயமடைந்த வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு காரைக்கால் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. செவ்வாய்கிழமை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே 24 சாட்சிகளிடம் நடத்திய விசாரணையிலிருந்து, 115 கேள்விகளை சுரேசிடம் நீதிபதி வைத்தியநாதன் கேட்டார். இதில் பெரும்பாலான கேள்விகளுக்கு சுரேஷ் மறுப்பு தெரிவித்தார். இதன் அடுத்த கட்ட விசாரணையை வரும் 17ம்தேதி நீதிபதி ஒத்திவைத்தார். அன்றைய தினம் காரைக்கால் நகராட்சி ஆணையர் ஆஜராகி சம்பவம் நடந்ததாக கூறப்படும் பகுதியின் லேஅவுட் சமர்ப்பிப்பது குறித்து பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
A sessions court here on Tuesday examined the accused in the acid attack case of Vinodhini. Sessions Judge M. Vaithyanathan posed 115 questions to the accused Suresh alias Appu who denied each of those directly incriminating questions and claimed ignorance to other queries relating to the train of occurrence in the aftermath of the crime.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X