For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போட்டோகாப்பி இல்லீங்க... இது, காபில போட்டோ: தைவானில் பரவும் ‘காபி ஆர்ட்’

Google Oneindia Tamil News

தைபே: நம்மூரில் இப்போது தான் கேக்குகளில், டீ கப்புகளில், டீ சர்ட்களில் என நம் உருவத்தை வரையும் கலாச்சாரமே அறிமுகமாகி ஆச்சர்யத்தை தந்து கொண்டிருக்கையில், தைவானில் காபியில் போட்டோ போட்டுத் தருகிறார்களாம்.

என்னங்க புரியலையா, இது போட்டோவை காப்பி போடுவதோ அல்லது போட்டோகாப்பி எனப்படும் ஜெராக்ஸ்ஸோ இல்லீங்க. நாம நுரை பொங்க குடிப்போமே பில்டர் காபி, அதுல அந்த நுரை மேல நம்மளோட போட்டோவ போட்டு குடிக்கத் தாராங்கலாம்.

லெட்ஸ் போட்டோ வித் காபி...

லெட்ஸ் போட்டோ வித் காபி...

தைவானில் இருக்கும் ‘லெட்ஸ் காபி' என்ற நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ள புது யுக்திதான் இந்த காபியில் போட்டோ .

இளமை... புதுமை...

இளமை... புதுமை...

எதையாவது புதுமையாக பார்த்தால் தான் உடனே இளசுகளுக்கு மிகவும் பிடித்து விடுமே, வரிசைக் கட்டி வந்து நின்று காபி குடிக்கிறார்களாம் இந்தக் கடையில்.

போட்டோ காப்பி...

போட்டோ காப்பி...

நமக்கு பிடித்தமான புகைப்படத்தை முன்கூட்டியே மெயிலிலோ அல்லது காபி ஷாப்பில் உள்ள மொபைலிலோ எடுத்துக் கொடுத்தால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் ஆவி பறக்கும் காபியின் மேல்புறத்தில் உங்கள் போட்டோ சிரிக்கும்.

ஸ்வீட் சர்ப்ரைஸ்...

ஸ்வீட் சர்ப்ரைஸ்...

முதலில் காபியின் மேற்பரப்பில் ஹார்ட், பூ என பொதுவாக வரையப் பட்ட வழக்கம் தான். அதை அப்படியே உல்டா பண்ணி கஸ்டமரின் போட்டோவை பிரிண்ட் பண்ணி சர்ப்ரைஸ் கொடுத்து கல்லாக் கட்டி வருகிறது இந்தக்கடை.

இனிப்பான போட்டோ...

இனிப்பான போட்டோ...

இதற்கென ஸ்பெஷல் பிரிண்டரைப் பயன் படுத்தும் இவர்கள், காபியின் மேற்பரப்பில் கிரீம் நிரப்பி அதில் போட்டோவை பிரிண்ட் செய்கிறார்கள்.

கலையாத நினைவுகள்...

கலையாத நினைவுகள்...

முதல் சிப்பிலேயே கரைந்துவிடும் என்ற போதிலும், காபியில் தங்கள் முகத்தைப் பார்ப்பது தைவான்காரர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறதாம்.

ஆல் இஸ் வெல்...

ஆல் இஸ் வெல்...

போட்டோவோடு நமக்கு பிடித்தமான வார்த்தைகளையும் சேர்த்து பிரிண்ட் செய்து தருவது கூடுதல் சிறப்பு.

எல்லார்கூடவும் சண்டை தானா?

எல்லார்கூடவும் சண்டை தானா?

ஆனால், தற்போது அமெரிக்காவும் இது போன்ற பிரிண்டரை உருவாக்கி இது எங்களுக்கு தான் சொந்தம் என தைவானோடு மல்லிக்கட்டி வருவது தான் வேடிக்கை.

English summary
Customers at Taiwanese coffee chain 'Let's Cafe' use a smartphone app to take pictures of themselves which are then printed into the coffee using edible powder.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X