For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராசா வழங்கிய 51 நிறுவனங்களின் லைசென்ஸை ரத்து செய்யக் கோரும் வழக்குகள் தள்ளுபடி!

By Shankar
Google Oneindia Tamil News

Supreme Court rejects two pleas against grant of 2G licences
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், 2004-07-ம் ஆண்டு காலத்தில், அப்போதைய தொலை தொடர்பு அமைச்சர் ஆ.ராசா வழங்கியவ 51 லைசென்ஸ்களை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு என்ற முறையில் அளிக்கப்பட்ட உரிமங்கள் இவை.

2012-ம் ஆண்டு இப்படி வழங்கப்பட்ட 122 உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டதுபோல், இவற்றையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று யோகேஷ் ஆனந்த் என்ற வழக்கறிஞர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.

நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல என்று கூறி நீதிபதிகள் அவற்றை தள்ளுபடி செய்தனர்.

மேலும் வோடபோன், டாடா டெலிசர்வீசஸ், ஐடியா செல்லுலார், ஆதித்யா பிர்லா டெலிகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள், தொலை தொடர்பு இலாகாவின் நெறிமுறைகளை மீறி விட்டதாகவும், அந்த நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிய மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

English summary
The Supreme Court on Thursday rejected two separate pleas seeking cancellation of 51 2G licenses issued during 2004-07 based on first-come-first-serve basis and a direction for a CBI probe into alleged violations of department of telecommunications (DoT) guidelines by Vodafone, Tata Teleservices, Idea Cellular and Aditya Birla Telecom Ltd.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X