For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

’கிரானைட் குவாரி’ மோசடி: மதுரை மாவட்ட முன்னாள் திமுக செயலர் வேலுச்சாமி கைது!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கிரானைட் குவாரி வாங்கித் தருவதாக கூறி ரூ25 லட்சம் பண மோசடி செய்ததாக மதுரை மாவட்ட முன்னாள் திமுக செயலர் வேலுச்சாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்ஹ கவுதம்குமார் என்பவர் மதுரை மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணனிடம் கொடுத்த புகார் மனுவில், கடந்த 2007-ம் ஆண்டு கிரானைட் குவாரி வாங்கி தருவதாக மதுரை மாவட்ட முன்னாள் தி.மு.க. செயலாளர் வேலுச்சாமி என்னிடம் ரூ.25 லட்சம் வாங்கினார். ஆனால் அவர் கிரானைட் குவாரி ஏதும் வாங்கி தரவில்லை. இதனை தெடர்ந்து கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். அவர் பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே கிரானைட் குவாரி வாங்க கொடுத்த ரூ,. 25 லட்சத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இது தொடர்பாக மதுரை போலீசார் இன்று வேலுச்சாமியை அழைத்து விசாரணை நடத்தி பின்னர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வேலுச்சாமி தி.மு.க. ஆட்சியில் மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர், தற்போது தி.மு.க.வில் தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ளார்.

English summary
Velusamy, the Senior DMK leader in Madurai have been arrested in Madurai on Saturday in connection with the granite scam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X