For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேட் மிடில்டனுக்கு இன்று பிரசவம்: லண்டன் விரைந்த இளவரசர் வில்லியம்ஸ்

Google Oneindia Tamil News

லண்டன்: கேட் மிடில்டனுக்கு இன்று குழந்தை பிறக்கலாம் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளதால், இளவரசர் வில்லியம் அவசரமாக லண்டன் விரைந்துள்ளார்.

இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன்னுக்கு இன்று பிரசவம் நடக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்காக லண்டனில் உள்ள செயிண்ட் மேரி ஆஸ்பத்திரியில் அவர் ஏற்கனவே அனுமதிக்கப் பட்டுள்ளார்..

பிரசவத்திற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முன்னேற்பாடாக உள்ளது. இந்நிலையில், பணிக்கு விடுமுறை போட்டு இளவரசரும் லண்டன் மருத்துவமனிக்கு விரைந்துள்ளாராம்.

வில்லியம், ஹரி பிறந்த மருத்துவமனை...

வில்லியம், ஹரி பிறந்த மருத்துவமனை...

இதே செயிண்ட் மேரிஸ் மருத்துவமனையில் தான் இளவரசி டயானாவுக்கு குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே மருத்துவமனையில் இளவரசி கேட்டும் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சிறந்த மருத்துவ வசதிகள்...

சிறந்த மருத்துவ வசதிகள்...

மிகவும் பிரபலமான இந்த மருத்துவமனியில் மிகச் சிறந்த குழந்தைப்பேறு மருத்துவர்களும், குழந்தைகள் நல மருத்துவர்களும், செவிலியர்களும், தாய்ப்பால் நிபுணர்களும் என அனைத்து சிறப்பு மருத்துவர்களும் ஆயத்த நிலையில் உள்ளனர்.

காஸ்ட்லி ரூம்...

காஸ்ட்லி ரூம்...

பிரசவத்தின் பிறகு, கேட் தங்குவதற்கு என சுமார் பத்தாயிரம் டாலரில் மிக ஆடம்பரமான அறை தயார் செய்யப் பட்டுள்ளது. இதன் ஒரு நாள் வாடகை கிட்டத்தட்ட பல லட்சங்களாம். கேட்டுக்கு இது போன்று இரு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ராயல் சூட்...

ராயல் சூட்...

டிவி, ரேடியோ, நியூச் பேப்பர், இண்டர்நெட் என சகல வசதிகளும் நிரம்பியதாக அந்த அறை உள்ளதாம்.

இனியெல்லாம் சுகமே...

இனியெல்லாம் சுகமே...

சுகப் பிரசவம் மூலமே குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதால், கேட் பிரசவ வலிக்காக ஆர்வமுடம் காத்திருக்கிறாராம்.

முகாமிட்ட மருத்துவர்கள்...

முகாமிட்ட மருத்துவர்கள்...

கேட் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னதாகவே, மருத்துவமனை வாசலில் முகாமிட்டு விட்டனர் பத்திரிக்கையாளர்கள்.

ஆவணப் படுத்த ஆசை...

ஆவணப் படுத்த ஆசை...

ஏற்கனவே, கேட்டின் பிரசவத்தை நேரடியாக ஆவணப் படுத்த வில்லியம்ச் விரும்பினார். ஆனால், சமூக விரோதிகள் கையில். அக்காட்சிகள் கிடைத்தால் ஆபத்து என கேட் அவரது ஆசைக்குத் தடை விதித்தார்.

பிரசவத்தில் உடனிருக்க...

பிரசவத்தில் உடனிருக்க...

தற்போது,பிரசவத்தின் போது மனைவியின் அருகில் துணையாக இருப்பதற்காக கடற்படையின் ஹெலிகாப்டர் விமானி பணிக்கு விடுமுறை போட்டுவிட்டு இளவரசர் வில்லியம் லண்டன் விரைந்துள்ளார்.

அதே ராஜ மருத்துவர்கள்...

அதே ராஜ மருத்துவர்கள்...

1990-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து ராணியின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் மார்கஸ் செட்செல் (70), கேட் மிடில்டன்னுக்கும் பிரசவம் பார்க்க உள்ளனர்.

English summary
Like the late Princess Diana before her, the Duchess of Cambridge has chosen to have her baby at the Lindo Wing at St Mary’s in Paddington, west London, royal sources revealed today - where staying in a private suite for a natural birth is likely to cost up to £10,000.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X