For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயிருக்கு ஆபத்து, ஊழல் வழக்குகள்: பதவிக்காலம் முடிந்ததும் பாகிஸ்தானை விட்டு வெளியேறும் சர்தாரி

By Siva
Google Oneindia Tamil News

Zardari may leave Pakistan after completing term as President
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் சர்தாரி தனது பதவிக்காலம் முடிந்த பிறகு நாட்டை விட்டு வெளியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பதவிக்காலம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேறிவிடுமாறு அவரது நண்பர்கள் அறிவுரை வழங்கியுள்ளார்களாம். சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை மீண்டும் நடத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நெருக்கடி கொடுத்துள்ளது.

சர்தாரி மீதான ஊழல் வழக்குகளை மீண்டு விசாரிப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்குகளில் தண்டனை கிடைத்தால் சிறையில் இருக்க வேண்டி இருக்கும். அதனால் தான் அவர் பதவிக்காலம் முடிந்த உடன் நாட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் கராச்சியில் சர்தாரியின் தலைமை பாதுகாப்பு அதிகாரி பிலால் ஷேக் கொல்லப்பட்டார்.

சர்தாரி அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு பல அடுக்கு பாதுகாப்பு எல்லாம் அளிக்கப்பட மாட்டாது. இதனால் அவர் தனது உயிரைக் காத்துக் கொள்ள வெளிநாட்டுக்கு சென்றுவிடக்கூடும் என்று தெரிகிறது.

English summary
Zardari's friends have advised him to leave Pakistan because of "serious threats to his life", the report on the website of the Dawn newspaper quoted sources close to the President as saying. Another "core reason" that could force Zardari to leave the country is corruption cases pending against him, the sources said. The Supreme Court has already heard a case about reopening graft cases against Zardari in Switzerland.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X