For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவுக்குள் ஊடுருவிய சீன ஹெலிகாப்டர்கள்!

By Mathi
Google Oneindia Tamil News

2 Chinese choppers violate Indian airspace
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுமர் பகுதியில் 2 சீன ஹெலிகாப்டர்கள் ஊடுருவி சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருக்கிறது.

ஜம்மு காஷ்மீரின் லடாக் பிராந்தியத்தில் இருக்கும் சுமர் பகுதியில்தான் இந்தியா-சீனா ராணுவத்தினர் தொடர்பு கொள்வர். இப்பகுதியில் கடந்த 17-ந் தேதி சீனா ராணுவத்தினர் ஊடுருவினர். மேலும் அப்பகுதியில் இருப்போரையும் எச்சரித்துவிட்டுச் சென்றனர்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மீண்டும் சீனா ராணுவத்துக்குச் சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் அதே சுமர் பகுதியில் காலை 8 மணியளவில் ஊடுருவியிருப்பது கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி இருக்கிறது. ஆனால் இதை சீனா ராணுவம் மறுத்துள்ளது. இந்திய எல்லைக்குள் தமது ஹெலிகாப்டர்கள் பறக்கவில்லை என்றும் எல்லையில்தான் பறந்ததாகவும் சீனா கூறியுள்ளது.

சீனா தொடர்ந்தும் சுமர் பகுதியை இலக்கு வைத்து ஊடுருவலை மேற்கொள்வதால் எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

English summary
The PLA choppers violated Indian airspace in the Chumar sector on July 11 around 0800 hours and returned after flying for some time there.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X