For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தந்தி சேவை நிறுத்தம்: கடைசி தந்தியை பெற்ற ராகுல் காந்தி

By Siva
Google Oneindia Tamil News

Rahul Gandhi - The man who received India’s last telegram
டெல்லி: தந்தி சேவை நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில் கடைசி தந்தி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவில் 163 ஆண்டுகளுக்கு முன்பு தந்தி சேவை துவங்கப்பட்டது. தற்போது நவீன உலகில் தந்தி சேவையின் பயன்பாடு வெகுவாக குறைந்ததையடுத்து நேற்று நள்ளிரவுடன் தந்தி சேவை நிறுத்தப்பட்டது. நேற்று இரவு 11.45 மணிக்கு தந்தி கவுண்ட்டர்கள் மூடப்பட்டன. கடைசியாக தந்தி சேவையின் மூலம் ரூ. 68,837 வருவாய் கிடைத்தது. நள்ளிரவு 12 மணி அடிக்க 15 நிமிடங்கள் இருக்கையில் தந்திக்கு விடை கொடுக்கப்பட்டது.

டெல்லியில் தந்தி சேவையை நிறுத்தும் முன்பு கடைசி தந்தி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்டுள்ளது. நல்ல செய்தி, கெட்ட செய்தி ஆகியவற்றை தந்தி மூலம் இனி அனுப்ப முடியாது.

கிராமங்களில் தந்தி வந்தாலே ஏதோ கெட்ட செய்தி என்று நினைத்து பதட்டம் அடைவார்கள். இனி அந்த பதட்டம் தேவையில்லை.

English summary
Just 15 minutes to midnight on Sunday, the iconic telegram breathed its last in the capital with the last message sent to Rahul Gandhi. The telegram counter closed at 11:45 PM and the revenue collected was Rs 68,837 as the country bid adieu to the harbinger of good and bad news for generations of Indians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X