For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத் தாக்குதல், மும்பை தாக்குதலை நடத்தியதே ‘மத்திய அரசு’தான்!!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கான சட்டங்களைக் கொண்டுவரவே நாடாளுமன்றத் தாக்குதல் மற்றும் மும்பை தாக்குதல் சம்பவங்களை மத்திய அரசே திட்டமிட்டு நடத்தியது என்று ஒரு அதிகாரியே 'திருவாய் மலர்ந்து' பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

குஜராத்தில் இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் சம்பவத்தில் சிபிஐயும் உளவுத் துறையும் மோதிக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் உள்துறை அமைச்சகத்தில் அண்டர் செக்ரெட்டரியாக பணியாற்றிய ஆர்.வி.எஸ். மணி என்பவரிடம் இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர் சம்பவத்தை விசாரித்த சிபிஐ சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த சதீஸ் வர்மாதான் இந்தச் செய்தியை கூறியதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இஷ்ரத் ஜஹான் உள்ளிட 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் 2 பொதுநலன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. ஒன்று லஸ்கர் இ தொய்பாவைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிற பிரனேஸ் பிள்ளை என்ற ஜாவேத் ஷேக்கின் தந்தை தாக்கல் செய்தது. மற்றொரு இஷ்ரத் ஜஹானின் தயார் தாக்கல் செய்தது.

இந்த இரண்டு வழக்குகளில் ஜாவேத் தொடர்பான வழக்கில் கர்னைல் சிங் என்பவர் தலைமையில் மத்திய அரசு சிறப்பு புலனாய்வு குழுவையும், இஷ்ரத் தயார் தொடர்ந்த வழக்கில் குஜராத் அரசு மோகன் ஜா தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவையும் அமைத்தன.

மோகன் ஜா சிறப்பு புலனாய்வுக் குழுவில் இஷ்ரத்தின் தயாரின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டவர் சதீஸ் வர்மா.

கர்னைல் சிங் மிசோராம் மாநிலத்துக்கு மாற்றப்பட்ட ஆர்.ஆர்.வர்மா தலைமையில் அக்குழு செயல்பட்டது. ஆர்.ஆர். வர்மா குழு, என்கவுன்ட்டர் போலியானது என்று அறிக்கை கொடுத்தது. இதனடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யவும் சிபிஐக்கு வழக்கை மாற்றியும் குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது சிபிஐ விரும்பினால் சதீஸ் வர்மாவின் உதவியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூற சிபிஐ குழுவில் சதீஸ் வர்மாவும் இடம் பெற்றிருந்தார். அவரது பணிக் காலம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் போலி என்கவுன்ட்டரில் ஐபி அதிகாரிகளின் பங்கு பற்றி அதி தீவிரம் காட்டியதால் கடந்த மாதம் சிபிஐ குழுவில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது குஜராத்தின் ஜூனாகத் போலீஸ் பயிற்சி கல்லூரியில் பணியாற்றி வருகிறார் சதீஸ் வர்மா.

உள்துறை செயலகத்தில் அண்டர் செகரட்டரியாக் இருந்த ஆர்.வி.எஸ். மணி தான், இஷ்ரத் என்கவுன்ட்டர் வழக்கில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டவர். குஜராத்தின் காந்தி நகரில் கடந்த மாதம் 22ம் தேதி சதீஸ் வர்மாவிடம் மணி விசாரணை நடத்தியிருந்தார். அப்போதுதான் நாடாளுமன்ற மற்றும் மும்பை தாக்குதல்கள் திட்டமிட்டு மத்திய அரசால் நடத்தப்பட்டது என்று மணியிடம் சதீஸ் வர்மா கூறியுள்ளார்.

நாடாளுமன்றம் மீது 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பொடா சட்டம் கொண்டுவரப்பட்டது. 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து யுஏபிஏ என்ற புதிய சட்டம் கொண் டுவரப்பட்டது என்றும் சதீஸ்வர்மா தம்மிடம் கூறியதாக மணி தெரிவித்துள்ளார்.

மேலும் ஐபி கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இதுவரை நடத்தப்பட்ட என்கவுன்ட்டர்கள் குறித்தும் சதீஸ் வர்மா சந்தேகம் எழுப்பியதாகவும் கூறியுள்ளார் மணி. சர்ச்சைக்குரிய இஷ்ரத் ஜஹான் என்கவுண்ட்டர் தொடர்பான விசாரணையின் போது மணியிடம் சதீஸ் வர்மா இந்த தகவல்களை கூறியிருக்கிறார்.

அமெரிக்காவில் இரட்டைக் கோபுர தாக்குதலை நடத்தியதே அமெரிக்க அரசு தான் என்றும், நிலவுக்கு மனிதனை அமெரிக்கா அனுப்பவே இல்லை, ஒரு பாலைவனத்தில் செட் போட்டு ஏமாற்றியது என்றும் புரளி கிளப்புவோர் இருக்கிறார்கள். அதே மாதிரி தான் இதுவும்!

English summary
In what is certain to escalate the already vicious fight between the CBI and the IB over the IshratJahan "fake encounter case", a former home ministry officer has alleged that a member of the CBI-SIT team had accused incumbent governments of "orchestrating" the terror attack on Parliament and the 26/11 carnage in Mumbai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X