For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னை நம்ப வைத்து, நடித்து ஏமாற்றி விட்டார் ஸ்ரீசாந்த் - டிராவிட் விரக்தி வாக்குமூலம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தன்னை சம்பந்தப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களுமே ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார் டிராவிட்.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஐபிஎல் தொடரின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சண்டிலா ஆகியோர் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டுக் கைதாகினர்.

இதுதொடர்பான வழக்கை டெல்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் டிராவிடின் வாக்குமூலத்தைப் போலீஸார் பெற்றுள்ளனர். அதில் இந்த வீரர்கள் குறித்து வேதனை வெளியிட்டுள்ளார் டிராவிட்.

என்னை ஏமாற்றி விட்டனர்

என்னை ஏமாற்றி விட்டனர்

இந்த மூன்று பேர் மீதும் நான் நிறைய மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருந்தேன். ஆனால் அவர்கள் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டனர்.

நடத்தை சரியில்லை

நடத்தை சரியில்லை

அவர்களது நடத்தை சரியில்லாமல் போய் விட்டது. இது எனக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

சந்தேகமே வரவி்ல்லை

சந்தேகமே வரவி்ல்லை

இந்த மூன்று பேர் மீதும் எனக்கு சந்தேகமே வராத அளவுக்கு நடித்துள்ளனர். ஒவ்வொரு போட்டியிலிரும் வீரர்கள் விளையாடும் விதத்தைப் பார்த்துத்தான் அடுத்த போட்டிக்கு நான் வீரர்களை தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார் டிராவிட்.

வீட்டில் வைத்து வாக்குமூலம்

வீட்டில் வைத்து வாக்குமூலம்

டிராவிடின் வீட்டிற்குச் சென்ற தனிப்படையினர் அவரது வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.

டிராவிட் சாட்சி

டிராவிட் சாட்சி

இந்தவழக்கில் டிராவிட் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது எந்த சந்தேகமும் இல்லை என்று போலீஸார் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Almost two months after the IPL spot-fixing came into light, Delhi Police have recorded Rajasthan Royals captain Rahul Dravid's statement regarding the infamous incident. Speaking to Delhi Police, Dravid in his statement said that he felt cheated by the conduct of the accused players, i.e - Sreesanth, Ankeet Chavan and Ajit Chandila. Since RR are the main accused side, Dravid's statement is considered to be the key here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X