For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறார் வயது வரம்பை 18ல் இருந்து 16 ஆக குறைக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

By Siva
Google Oneindia Tamil News

SC turns down plea to reduce age of juvenile from 18 to 16 years
டெல்லி: சிறார் வயது வரம்பை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்ச டிசம்பர் மாதம் 23 வயது பிஸியோதெரபி மாணவி 6 பேரால் கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டதில் பலியானார். அவரை கற்பழித்தவர்களில் 17 வயது சிறுவனும் அடக்கம். சிறுவன் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சிறார் வயது வரம்பை தற்போது உள்ள 18ல் இருந்து 16 ஆக குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிறார் வயது சட்டத்தில் மாற்றம் செய்ய முடியாது என்று தெரிவித்தனர். மேலும் சிறார் வயது வரம்பை 16 ஆக குறைக்கக் கோரிய மனுவையும் அவர்கள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

இந்த தீர்ப்பால் டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் சிக்கிய சிறுவனுக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

English summary
The apex court on wednesday rejected a plea seeking it to reduce the age of juveniles charged with grave crimes from 18 to 16 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X