For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரி ஏய்ப்பு புகார்: லயன் டேட்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை ரெய்டு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

IT raid on Lion Dates Company
சென்னை: வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து பிரபலமான லயன் டேட்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் மிகவும் பிரபலமான லயன் டேட்ஸ் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து, சென்னை, திருச்சியில் உள்ள லயன் டேட்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள், உரிமையாளரின் வீடுகளில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் நூற்றுக்கும் அதிகமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையின் போது அலுவலகத்தின் கதவுகளை அடைத்துக் கொண்ட அதிகாரிகள் யாரையும் வெளியேற அனுமதிக்கவில்லை. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

பிரபலமான லயன் டேட்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The 5-hour search operations conducted by the Investigation Directorate of Income Tax in the Lion Dates company on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X