For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கண்ணாடிகள்’ மூலம் சூரியஒளியை தரிசிக்கும் ‘ருஜூகான்’மக்கள்

Google Oneindia Tamil News

ருஜுகான்: கிட்டத்தட்ட சூரிய ஒளியே படாமல் நூறு ஆண்டுகளைக் கடந்து விட்ட நார்வேயின் ருஜூகான் நகரம், தற்போது கண்ணாடிகளின் உதவி கொண்டு சூரிய வெளிச்சத்தைப் பெற இருக்கிறது.

நார்வேயில் டெலிமார்க் பகுதியில் அமைந்திருக்கும் தொழிற்பேட்டை நகரமான ருஜூகான், குறுகலான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. எனவே, இங்கு சூரிய வெளிச்சம் இயற்கையாக விழுவதற்கு வாய்ப்பே இல்லை.

எனவே, சூரிய ஒளியை விரும்பும் மக்கள், ரோப்காரில் குறிப்பிட்ட மலைச் சிகரங்களுக்குச் சென்று சூரிய நமஸ்காரம் செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் நகரம்...

தொழில் நகரம்...

1907-ம் ஆண்டு, நோர்ஸ்க் ஹைட்ரோ என்ற தொழில் நிறுவனத்தின் இணை இயக்குனரான சாம் அய்டு என்பவரால் இந்த ருஜூகான் தொழிற்நகரம் உருவானது.

வெயிலை வாங்க....

வெயிலை வாங்க....

குளிர்காலத்தில் இங்குள்ள மக்கள் கேபிள் கார் மூலம் அருகில் உள்ள மலை உச்சிக்கு சென்று சூரிய வெளிச்சத்தை அனுபவித்துத் திரும்புவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

மாற்றுத் தீர்வு...

மாற்றுத் தீர்வு...

ருஜூகான் நகரத்திற்கு சூரிய ஒளியை கொண்டு வருவது குறித்து கடந்த ஐந்து வருடங்களாகவே திட்டமிடப் பட்டு வந்தநிலையில், தற்போது சரியான ஒரு மாற்றுத் தீர்வு கண்டறியப் பட்டுள்ளது.

கண்ணாடிகள் மூலம்...

கண்ணாடிகள் மூலம்...

அதன் படி, அருகில் உள்ள மலையில் 450 மீட்டர் உயரத்தில் மூன்று பெரிய கண்ணாடிகளைப் பொருத்தியுள்ளனர். அக்கண்ணாடிகளில் படும் சூரிய வெளிச்சம் எதிரொலிப்பதன் மூலம், நகரின் மத்தியப் பகுதியில் சூரிய வெளிச்சம் படுகிறது.

இருந்த இடத்திலேயே...

இருந்த இடத்திலேயே...

இத்திட்டம் கடந்த 1-ந்தேதி முதல் செயல் படுத்தப் பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் பயணம் மேற்கொள்ளாமல் இருந்த இடத்தில் இருந்தே தற்போது சூரிய ஒளியைப் பெறுகின்றனர்.

English summary
Residents in Rjukan, a Norwegian industrial town nestled in a narrow valley in central Norway, will get some sunlight on the town square from this September, breaking a history of over 100 years of having no sunlight in winter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X