For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆகஸ்ட் 15 முதல் ஒட்டகப் பாலில் டீ போட்டு குடிக்கலாம்!

By Mathi
Google Oneindia Tamil News

Amul camel milk, from Kutch
அகமதாபாத்: ஒட்டகப் பாலில் டீ போட்டு குடிக்க ஆசைப்படுகிறவரா நீங்கள்? உங்கள் விருப்பம் ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் அமுல் நிறுவனத்தால் இனிதே நிறைவேற இருக்கிறது..

ராஜஸ்தான் மாநிலத்தில்தான் என்று இல்லை..குஜராத்தின் பல பகுதிகளிலும் ஒட்டகங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பாக கட்ச் பிரதேசத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஒட்டகங்கள் இருக்கின்றன. இப்போது அங்கு ஒட்டகப் பால் நடைமுறையில் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த ஒட்டகப் பாலை கொள்முதல் செய்து சந்தைப் படுத்த அமுல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஒட்டகப் பாலை கட்ச் மாவட்ட பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து சந்தைக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. இது ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் சந்தைகளில் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக கட்ச் மாவட்ட தலைநகர் பூஜ் அருகே பிரமாண்ட பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.

உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு வைட்டமின் சி சத்து உள்ள ஒட்டகப் பால் கொடுப்பது நல்லதாம்.

ஆக, ஆகஸ்ட் 15 முதல் ஒட்டகப் பால் டீ குடிக்க ரெடி?

English summary
Amul, which collects, processes, packages and markets buffalo and cow milk, will now do an encore with camel milk that is low on fat content and seen as curing lifestyle diseases. India’s best known milk and dairying products brand will commence marketing camel milk from August 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X