For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்னோடென் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்த ஸ்வீடன் பேராசிரியர்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென் பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்துள்ளார் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர்.

உலக நாடுகளின் ரகசியக்களை அமெரிக்கா உளவு பார்த்தது என்ற உண்மையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை ஊழியரான எட்வர்ட் ஸ்னோடென். அமெரிக்க ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அமெரிக்கா ஸ்னோடென்னை தேசத்துரோகி முத்திரை குத்தி தேடி வருகிறது.

தற்போது ஸ்னோடென், ரஷ்ய அரசிடம் அரசியல் தஞ்சம் கேட்டு ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்தின் பயணிகள் பகுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில், ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஸ்டெபென் ஸ்வால்ஃபோர்ஸ் என்ற பேராசிரியர் நோபல் பரிசுக்கு எட்வர்ட் ஸ்நோடெனின் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.

இது குறித்து விளக்கமளித்துள்ள ஸ்டெபென் கூறுகையில், ‘அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் பறிக்கப்படுவதை எதிர்த்து தனி நபர்கள் போராடலாம் என்பதை தனது வாழ்க்கையையும், உயிரையும் பணயம் வைத்து எட்வர்ட் ஸ்நோடென் நிரூபித்துள்ளார்.

அவரது இந்த முன்முயற்சி, அமைதிக்கான நோபல் பரிசுக்கான அனைத்து தகுதிக்கும் உரியதாகும். மேலும் 2009ம் ஆண்டு அவசரக் கோலத்தில் குளறுபடியாக அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு வழங்கிய களங்கத்தையும் எட்வர்ட் ஸ்நோடெனுக்கு இந்த பரிசை வழங்குவதன் மூலம் போக்கிக் கொள்ளலாம்' என தெரிவித்துள்ளார்.

English summary
A Swedish professor has nominated NSA whistleblower Edward Snowden for the Nobel Peace Prize.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X