For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெண்டுல்கருக்கு இப்போ இல்லை! தியான் சந்த் பெயர் பாரத் ரத்னாவுக்கு பரிந்துரை!

By Mathi
Google Oneindia Tamil News

Dhyan Chand preferred over Sachin Tendulkar for Bharat Ratna
டெல்லி: ஹாக்கி விளையாட்டு ஜாம்பவனாகிய தியான் சந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பரிந்துரைத்துள்ளது.

பாரத ரத்னா விருதுக்கு ஹாக்கி வீரர் தியான் சந்த் மற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இருப்பினும் தற்போது ஹாக்கி ஜாம்பவனாகிய தியான் சந்த் பெயரை மட்டுமே பாரத ரத்னா விருதுக்கு விளையாட்டுத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

1928, 1932, 1936 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்தவர் தியான் சந்த. கடந்த 1979ஆம் ஆண்டு அவர் காலமானார். இதனால் அவருக்கு முதலில் பாரத ரத்னா விருது கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சச்சினைப் பொறுத்தவரையில் இன்னமும் விளையாடிக் கொண்டிருப்பவர். அவர் பாரத ரத்னா விருதைப் பெறுவதற்கான காலம் இருக்கிறது என்பதால் தியான் சந்த்துக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாரத ரத்னா விருதானது சமூக சேவகர்கள், இலக்கியவாதிகள், அரசியல்வாதிகள், இசை அமைப்பாளர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டால் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த நபர் முதல் முறையாக பாரத ரத்னா விருது பெறுகிறார் என்ற பெருமை கிடைக்கும்

English summary
Union Sports Minister Jitendra Singh has written to Prime Minister Manmohan Singh to confer Bharat Ratna to hockey legend of yesteryear Dhyan Chand. In fact, the sports ministry has chosen the hockey wizard over ace cricketer of contemporary time Sachin Tendulkar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X