For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பீகார்: மதிய உணவால் பாதித்த குழந்தைகள் சிகிச்சை பெற்ற ஹாஸ்பிடலில் திடீர் காஸ் கசிவு!

By Mathi
Google Oneindia Tamil News

பீகார்: மதிய உணவால் பாதித்த குழந்தைகள் சிகிச்சை பெற்ற ஹாஸ்பிடலில் திடீர் காஸ் கசிவு!

பாட்னா: பீகாரில் மதிய உணவு சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த பாட்னா மருத்துவமனையில் திடீரென காஸ் கசிவு ஏற்பட்டதால் பெரும் பீதி ஏற்பட்டது.

பீகாரில் பள்ளிக் கூடத்தில் மதிய உணவு சாப்பிட்டதால் 22 குழந்தைகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 25 குழந்தைகள் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திடீரென இன்று அந்த மருத்துவமனையின் ஏசியில் காஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் பெரும் பீதி ஏற்பட குழந்தைகள் உட்பட நோயாளிகள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டனர். பின்னர் காஸ் கசிவு சரி செய்யப்பட்டது.

இருப்பினும் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த அறையில் இருந்த ஏசியில் கசிவு ஏற்படவில்லை என்று அம்மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பட்ட காலிலேயே படும்?

English summary
Gas leak in Patna hospital where Chhapra food poisoning children are being treated, patients evacuated
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X