For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆகஸ்ட் 6ல் பாகிஸ்தான் அதிபர் தேர்தல்!

By Mathi
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் தற்போதைய அதிபராக முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவரான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவர் ஆசிப் அலி சர்தாரி பொறுப்பு வகிக்கிறார். சர்தாரியின் பதவிக்காலம் செப்டம்பர் 8-ந் தேதி முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6-ந் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இந்த அறிவிப்புக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தேசிய மற்றும் மாகாண சபைகளில் 42 இடங்களுக்கான தேர்தல் ஆகஸ்ட் 22-ந் தேதிதான் நடைபெறுகிறது. ஆகையால் அதிபர் தேர்தல் என்பது ஆகஸ்ட் 22-ந் தேதிக்குப் பின்னரே நடைபெற முடியும் என்ற நிலையில் முன்கூட்டியே நடத்துவது ஏன் என்பது ஆச்சரியமளிப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது துபாய் மற்றும் லண்டனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் சர்தாரி மீண்டும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று கூறப்படுகிறது. அத்துடன் அவர் மீண்டும் பாகிஸ்தானுக்கே திரும்ப மாட்டார் என்றும் தகவல்கள் பரவி உள்ளனர்.

எப்படியும் தேசிய மற்றும் மாகாண சபைகளில் அதிகம் இடங்களை பெற்றுள்ள பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியே எளிதாக வெற்றி பெறும் என்று தெரிகிறது.

English summary
The election to choose the next Pakistan President will be held on August 6, over a month earlier than expected, in a move seen as an attempt to hasten the exit of incumbent Asif Ali Zardari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X