For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கவிஞர் வாலி மறைவு: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

By Shankar
Google Oneindia Tamil News

சென்னை: கவிஞர் வாலியின் மறைவுக்கு ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்த்

தே.மு.தி.க, தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், "திரையுலக ஜாம்பவான் பிரபல பாடலாசிரியர் கவிஞர் வாலி நேற்று உடல்நலகுறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தமிழ்த்திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் உட்பட அனைத்து பிரபலங்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் நான் நடித்த ஏழை ஜாதி, ஆனஸ்ட்ராஜ், பாட்டுக்கொருதலைவன், திருமூர்த்தி, பொன்மனச்செல்வன் உள்ளிட்ட பல படங்களில், பல பாடல்களை எழுதியுள்ளார்.

கவிஞர் வாலியின் இழப்பு, ஈடு செய்ய முடியாத இழப்பு. தமிழ் உலகுக்கு மட்டுமல்ல, திரை உலகிற்கும், என் போன்றவர்களுக்கும் இது எந்த வகையிலும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து துயருரும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்," என்றார்.

Political leaders pay homage to Vaali

திருமாவளவன்

"கவிஞரய்யாவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவருடன் நான் கடைசி காலகட்டத்தில்தான் பழகினேன். அவரைப் பற்றி நான் கேள்விப்பட்ட பலவற்றையும் உடைத்தெறிந்த பெருமகன். என் பிறந்த நாள் கவியரங்கில் கலந்து கொண்டு, எனக்கு கவிதைப் படித்து பெருமைப்படுத்தினார். அவரது இழப்பு உண்மையாகவே ஈடுசெய்ய முடியாதது," என்றார்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை:

"தமிழுலகம் போற்றும் சிறந்த கவிஞர்களில் வாலியும் ஒருவர். தத்துவ பாடல்களை எழுதுவதில் முத்திரைப்பதித்தவரான அவர் துள்ளல் பாடல்களையும் எழுதியிருக்கிறார். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய சாதனைக்கு சொந்தக்காரர்.

திரைப்பாடல்களை எழுதியவர் என்பதைத் தாண்டி ஏராளமான கவிதை நூல்களையும், உரைநடை நூல்களையும் எழுதிய எழுத்தாளர், சிறந்த ஓவியர், திரைப்பட நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைத்துரையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்."

கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவரான கருத்தாழக்கவிஞர் வாலி இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகப்பெரும் அதிர்ச்சியை தந்தது. சில நாட்களுக்கு முன்கூட அவரை மருத்துவமனையில் சந்தித்தபோது, இன்முகத்தோடு அப்பொழுது வரவேற்ற அவர் தம் பண்பும், பாசமும் கொள்கை வேறுபாடு உள்ள நம்மைப்போன்றவர்களிடம் கூட அகநக நட்புடன் பழகிய பாங்கும் எப்போதும் மறக்க இயலாது. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கலை உலகத்தாருக்கும் திராவிடர் கழகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

English summary
Political leaders Vijayakanth, Thirumavalavan, Ramadass and Veeramani paid rich homage to late legend poet Vaali.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X