For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

9 நாளில் 760 பேர் மரணம்.. 100 டிகிரி வெயிலுக்கே சுருண்டு உருளும் இங்கிலாந்து!

Google Oneindia Tamil News

லண்டன்: 100 டிகிரி வெயிலைக் கூட நம்ம இங்கிலாந்துக்காரர்களால் தாங்க முடியவில்லை. அங்கு இந்த வெயிலுக்கே பலர் மரணத்தைத் தழுவி வருகின்றனர்.

வெயிலைச் சமாளிக்க முடியாமல் மக்கள் நீர் நிலைகளை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

கடும் வெயிலோடு அனல் காற்றும் இங்கிலாந்து மக்களை பாடாய்ப்படுத்தி வருவதால் மக்கள் செம காட்டத்துடன் நடமாடிக் கொண்டிருக்கின்றனராம்.

10 நாளாவே வெயில் மண்டையைப் பொளக்குதப்பா

10 நாளாவே வெயில் மண்டையைப் பொளக்குதப்பா

கடந்த சில நாட்களாக, குறிப்பாக 10 நாட்களாக கடுமையான வெயில் இங்கிலாந்தை வாட்டிக் கொண்டிருக்கிறதாம்.

760 பேர் பலி

760 பேர் பலி

கடந்த 9 நாட்களில் மட்டும் வெயில் தாங்க முடியாமல் 760 பேர் உயிரிழந்துள்ளனராம்.

பல இடங்களில் 100ஐத் தொடும் வெயில்

பல இடங்களில் 100ஐத் தொடும் வெயில்

நாட்டின் பல பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தொட ஆரம்பித்துள்ளதாம். சராசரியாக பல பகுதிகளில் 90 டிகிரி வரை வெயில் வெளுத்துக் கொண்டிருக்கிறதாம்.

அலர்ட்டா இருங்கப்பா...

அலர்ட்டா இருங்கப்பா...

வெயில் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போவதால் லெவல் 4 எச்சரிக்கையை அந்த நாட்டு அரசு விடுத்துள்ளது. மேலும் அவசர நிலையை அறிவிக்கவும் தயாராகி வருகிறதாம்.

6 நாட்களாக 80 டிகிரிக்கு மேல்

6 நாட்களாக 80 டிகிரிக்கு மேல்

கடந்த 6 நாட்களாக இங்கிலாந்தின் பல பகுதிகளில் குறைந்தது 80 டிகிரிக்கு மேல் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறதாம்.

முடி முதல் அடி வரை அனல் தாங்கலையே...

முடி முதல் அடி வரை அனல் தாங்கலையே...

மக்கள் இந்த வெயிலைத் தாங்க முடியாமல் கஷ்டப்படுகின்றனராம். தலையிலிருந்து பாதம் வரை சூடு தாங்க முடியாமல் தவிக்கின்றனராம். அனல் காற்று வேறு சேர்ந்து கொண்டுள்ளதால், வெளியில் போனால் வெள்ளைத் தோல் தாங்குமா என்ற அச்சமும் மக்களை வாட்டி வதைக்கிறது.

நீர் நிலைகளை நோக்கி

நீர் நிலைகளை நோக்கி

வெயில் கொடுமையிலிருந்து தப்பி பூங்காக்களை நோக்கியும், நீச்சல் குளங்களை நோக்கியும், கடல், ஆறுகளை நோக்கியும் மக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள்

ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள்

மேலும் முக்கிய இடங்களில் தண்ணீர் தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. குடிக்கவும், தண்ணீரை எடுத்து முகம் கழுவியும், மேலே ஊற்றிக் கொள்ளவும் இங்கு ஏற்பாடு செய்ய்பட்டுள்ளது. சன் ஸ்டிரோக் வந்தால் முதலுதவி அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாம் பரவாயில்லை போல.. 100 டிகிரியைத் தாண்டி பல மாதங்கள் வெயில் வெளுத்தாலும் தாங்கும் திடத்துடன் இருக்கிறோமே....

English summary
A severe and prolonged heatwave is believed to have killed up to 760 people in England in the past nine days. Temperatures in parts of the country reached as high as 32 degree celsius on Thursday, four degrees short of the government announcing a Level 4 alert marking a national emergency. Thursday was the sixth consecutive day with a recorded daytime temperature of over 30 degrees celsius marking Britain's longest heatwave in seven years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X