For Daily Alerts
Just In
தொடரும் சோகம்.. குஜராத்தில் உணவு விஷமானதால் 21 மாணவர்கள் பாதிப்பு!
அகமதாபாத்: பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து தமிழகத்தின் நெய்வேலியிலும் பள்ளி மாணவர்கள் உணவு விஷமாகிப் போன விபரீதம் நிகழ்ந்தது. இநிந்லையில் குஜராத்திலும் மதரஸாவில் உணவு விஷமானதில் 21 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் அப்டஸா தாலுகாவில் உள்ள நலியா கிராமத்தில் மதரஸாவில் பயிலும் 21 மாணவர்கள் விஷமான உணவு உண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
நேற்று காலையில் அவர்களுக்குப் பரிமாறப்பட்ட அரிசி சோறு, காய்கறியில் செய்யப்பட்ட கறிவகைகள் முந்தின நாளே செய்யப்பட்டதாம். நோன்பு நேரம் என்பதால் அவ்வாறு செய்யப்பட்டது என்றும், அதை உண்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட 21 பேரில் இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.