For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்னோடென்னுக்கு ரஷியா அடைக்கலம்? ஒபாமாவின் பயணம் ரத்து?

By Mathi
Google Oneindia Tamil News

Obama and Snowden
மாஸ்கோ: அமெரிக்காவிலிருந்து தப்பி வெளியே வந்த ஸ்னோடென்னுக்கு ரஷியா அடைக்கலம் தரக்கூடும் என்ற நிலையில் அந்நாட்டுக்கான பயணத்தை ஒபாமா ரத்து செய்யலாம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா எப்படியெல்லாம் உலக நாடுகளை வேவு பார்த்தது என்பதை அம்பலப்படுத்தியவர் ஸ்னோடென். இதனால் அமெரிக்கா அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய அமெரிக்கா முனைப்பு காட்டி வருகிறது.

ஆனால் கடந்த ஒரு மாத காலமாக ரஷியாவின் மாஸ்கோ விமான நிலையத்தில் தங்கியபடியே வெளிநாடுகளில் அடைக்கலம் கோரும் முயற்சிகளில் ஸ்னோடென் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்கா தொடர்பான கூடுதல் தகவல்களை வெளியிடாமல் இருந்தால் அடைக்கலம் தர தயார் என்று ரஷியா அறிவித்திருந்தது. ஸ்னோடென்னும் இதை ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. இதனால் ஸ்னோடென்னுக்கு ரஷியா அடைக்கலம் தரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா செப்டம்பர் மாதம் ரஷியா செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து இரு நாட்டு உறவுகள், சிரியா, ஈரான் மற்றும் ஆயுத கட்டுப்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். ஆனால் தற்போது ஸ்னோடென்னு ரஷியா அடைக்கலம் கொடுக்கக் கூடும் என்பதால் இந்த பயணத்தை அவர் ரத்து செய்யக் கூடும் எனத் தெரிகிறது.

English summary
The White House is considering canceling a fall summit between US President Barack Obama and Russian President Vladimir Putin in Moscow, a move that would further aggravate the already tense relationship between the two leaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X