For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமேஸ்வரம் கோவிலை தாக்க சதி: அனுமதியில்லாத 54 லாட்ஜ்களுக்கு போலீஸ் தடை

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலை தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாகக் கிடைத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இயங்கி வந்த 54 அனுமதியில்லாத லாட்ஜ்களை மூடுமாறு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

புகழ் பெற்ற ராமேஸ்வரம் கோயிலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக, உளவுத்துறை அளித்த எச்சரிக்கையின் பேரில் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் எஸ்.பி மயில்வாகனம் உத்தரவின் பேரில், ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி செயல்படும் லாட்ஜுக்கள் பற்றி கணக்கெடுக்கப்பட்டது. இதில், 54 லாட்ஜ்க்கள் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் காட்டுபிள்ளையார் கோயில், கிழக்குத்தெரு, இந்தித்தெரு, ஜெ.ஜெ.நகர், நான்கு ரதவீதிகளில்செயல் படுவது போலீசாருக்கு தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து, எஸ்.பி., உத்தரவுப்படி, ராமேஸ்வரம் டி.எஸ்.பி., மோகன்ராஜ், எஸ்.ஐ.,க்கள் சந்தானபோஸ், ஆறுமுக நயினார் மற்றும் போலீசார், ஆகியோர் அனுமதியின்றி இயங்கி வந்த அந்த 54 லாட்ஜ்'களை மூடுமாறு, நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

English summary
After intelligence bureau warning that terrorist may attack Ramaeswaram temple, the security has been strengthened. And the illegally runned 54 lodges have been closed by the police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X