For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

157 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்: என்எல்சி பள்ளி சத்துணவு அமைப்பாளர் உள்பட 3 பேர் சஸ்பெண்ட்

Google Oneindia Tamil News

நெய்வேலி: நெய்வேலி என்.எல்.சி. பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேரை மாவட்ட கலெக்டர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் 11வது வட்டத்தில் என்.எல்.சி. பெண்கள் மேனிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் 2700 மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களில் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு அரசு சார்பில் சத்துணவு வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியம் வழக்கம் போல் மாணவிகள் சத்துணவு சாப்பிட்டனர். சத்துணவுடன் கூடுதலாக முட்டையும் வழங்கப்பட்டது. சத்துணவு சாப்பிட்டு முடித்த மாணவிகள் அனைவரும் தங்களுடைய வகுப்பறைகளுக்கு சென்றனர்.

அப்போது, சத்துணவு சாப்பிட்ட மாணவிகளில் சிலர் வாந்தி எடுத்தனர். சிலர் மயங்கி விழுந்தனர். நேரம் செல்ல செல்ல சத்துணவு சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கும் மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் நெய்வேலியில் பரபரப்பு ஏற்பட்டது.

சத்துணவு சாப்பிட்ட 157 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட காரணமாக இருந்த சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட 3 பேரை மாவட்ட கலெக்டர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

English summary
Cuddalore collector suspended 3 persons after 157 girls fell sick after eating the mid day meal at NLC girls school in Neyveli.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X