For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் குறைந்து போன மக்களின் செலவிடும் சக்தி!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் மாநிலத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப் புறங்களில் மக்களின் செலவிடும் சக்தி குறைந்து போயுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் அனைத்து மாநில கிராமப் புற மற்றும் நகர்ப் புற மக்களின் செலவிடும் சக்தி தொடர்பாக நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்கனைஷேசன் என்ற அமைப்பு ஆய்வு செய்தது. 1999-2000ம் ஆண்டு முதல் 2011-12ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் நாட்டின் வளர்ச்சிக்கு முன்னோடி மாநிலமாக சொல்லப்படுகிற குஜராத் பின் தங்கியே இருக்கிறது. தேசிய அளவிலான தனிநபர் நுகர்வு செலவு சதவீதத்தை விட மிகக் குறைவாகவே குஜராத்தின் தனிநபர் நுகர்வு செலவு இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆனால் ஆந்திர மாநிலம் வளர்ச்சி கண்டிருக்கிறது. 2000-ம் ஆண்டில் இம்மாநிலம் 11வது இடத்தில் இருந்தது. தற்போது கிராமப் புற பிரிவில் 5வது இடத்தையும் நகர்ப்புற பிரிவில் 6வது இடத்தையும் பிடித்திருக்கிறது.

தமிழகமோ நகர்ப்புற பிரிவில் 2வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்கு சென்றிருக்கிறது. இருப்பினும் கிராமப் புற பிரிவில் 6வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதாவது தமிழகத்தில் கிராமப் புற மக்களிடம் செலவிடும் சக்தி, நகர்ப்புற மக்களைவிட அதிகரித்திருக்கிறதாம்.

கிராமப் புற மக்களிடம் அதிகம் செலவிடும் சக்தி கொண்ட மாநிலங்களில் கேரளா, பஞ்சாப், ஹரியானா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகியவைதான் டாப் 5. அதிக செலவிடும் சக்தி கொண்ட நகர்ப்புற மக்கள் ஹரியானா, கேராளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப் மாநிலங்களில்தானாம்!

நேஷனல் சாம்பிள் சர்வே ஆர்கனைஷேசனின் இந்த புள்ளி விவரத்தை வைத்து இப்போது குஜராத்தை சாடியுள்ளது காங்கிரஸ். இது பற்றி கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சச்சின் பைலட், குஜராத் ஒளிர்கிறது என்ற மாய்மால பிரசாரத்தை இது அம்பலப்படுத்தியுள்ளது. ஊடகங்கள் உள்ளிட்ட கட்டமைக்கப்பட்ட பிரசாரம் மூலம் மோடி தம்மை விளம்பரப்படுத்திக் கொள்கிறார் என்றார்

English summary
Gujarat has slid from fourth to eighth in the ranking of states for rural spends, and from seventh to ninth in urban expenditure, according to a comparative analysis of data on monthly per capita spending between 2011-12 and 1999-2000, both of which are put out by the National Sample Survey Organisation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X