For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யுஎஸ்: தவறான எடை குறைப்பு மருந்து வழங்கிய இந்திய டாக்டருக்கு 2 ஆண்டு சிறை, ரூ. 3.75 கோடி அபராதம்

Google Oneindia Tamil News

Indian-American doctor sentenced to 2 years in jail
வாஷிங்டன்: எடை குறைப்பு கிளினிக்கில் அனுமதியற்ற மருந்துகளை வழங்கிய இந்திய வம்சாவளி மருத்துவருக்கும், அவரது மனைவிக்கும் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் வழங்கி உத்தரவிட்டுள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

அமெரிக்காவில் உள்ள இண்டியானா, இல்லினாஸ் ஆகிய நகரங்களில் உடல் எடைக்குறைப்பு கிளினிக் நடத்தி வருபவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ராகேஷ் ஆனந்த் (57). அவர் மீது, அவரிடம் எடைக் குறைப்புக்காக வரும் பாதிக்கப்பட்டவர்களிடம் டயட் மற்றும் உடற்பயிற்சியோடு அமெரிக்கா மருத்துவத்துறையின் அனுமதி மறுக்கப்பட்ட மாத்திரைகள் வழங்கியதாக வழக்கு தொடரப்பட்டது.

அதோடு அவருடைய மனைவி மீனா ஆனந்த் (53) வருமான வரி ஏய்ப்பு செய்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது. வழக்குகளை விசாரித்த நீதிபதி வான் பொக்கெலின், டாக்டர் ராகேஷ் ஆனந்துக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.3.75 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அவருடைய மனைவி மீனா ஆனந்துக்கு 30 நாள் ஜெயில் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதே போன்று மருத்துவத்துறை அனுமதியளிக்காத மருந்துக்களை வழங்கியதாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில் டாக்டர் தினேஷ் சராயா (75) என்பவருக்கு வ்ரும் 30ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
An Indian-American doctor, who owned weight loss clinics in the U.S., has been sentenced to two years in prison for illegally dispensing millions of pills containing amphetamine-based controlled substances to patients.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X