For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா வரும் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன்: பாதுகாப்பு, பொருளாதாரம் குறித்து பேச்சு

By Siva
Google Oneindia Tamil News

US Vice Prez Joe Biden's four-day India visit begins today
வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் 4 நாள் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார். அவருடன் அவரது மனைவி ஜில் பிடெனும் வருகிறார். அவர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார்.

நாளை இரவு பிடெனுக்கு ஹமீத் அன்சாரி விருந்து அளிக்கிறார். பிடென் இந்திய தலைவர்களுடன் பொருளாதார வளர்ச்சி, வர்த்தகம், பருவநிலை மாற்றம், பாதுகாப்பு மற்றும் முதலீடுகள், கல்வி உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

பிடென் பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பேசுகிறார். வரும் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு தேதிகளில் பிடென் மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மும்பையில் தொழில் அதிபர்கள் கலந்துகொள்ளும் வட்டமேஜை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மேலும் மும்பை பங்குச் சந்தையில் அவர் உரை நிகழ்த்துகிறார்.

வரும் 25ம் தேதி அவர் மும்பையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்கிறார். பிடென் செனடராக இருக்கையில் கடந்த 2008ம் ஆண்டு இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Joe Biden will be on his maiden visit to India as US Vice President Monday to discuss key bilateral issues, including trade, energy and defence, to make Indo-US ties the most important strategic partnership of the 21st century.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X