For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவரப் போயி பேசாத பிரதமர்னு சொல்லிட்டாங்களே குமாரு... !

Google Oneindia Tamil News

டெல்லி: உம்முன்னு இருக்கிறார்.. கம்முன்னு இருக்கிறார்.. ஒன்னுமே பேச மாட்டேங்கிறார்.. சிரிப்பதில் கூட கஞ்சத்தனம் காட்டுகிறார்.. இப்படித்தான் பிரதமர் மன்மோகனை எதிர்க்கட்சியினர் கிண்டலடிக்கின்றனர். ஆனால் மனுஷன், கடந்த 9 வருங்களில் 1300 உரைகளை நிகழ்த்தியுள்ளாராம்.

2004ம் ஆண்டு முதல் இதுநாள் வரை பிரதமர் ஆற்றிய உரைகளின் எண்ணிக்கை இது.

இதுகுறித்த ஒரு தகவல் தொகுப்பு வெளியாகியுள்ளது. அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்....

பேசுவதில் சாதனை

பேசுவதில் சாதனை

உரை நிகழ்த்துவதில் ஒரு பிரதமராக சாதனையே படைத்துள்ளாராம் பிரதமர் மன்மோகன் சிங்.

2004 முதல்

2004 முதல்

2004ம் ஆண்டு அவர் பிரதமர் பதவிக்கு வந்தார். அன்று முதல் இன்று வரை மொத்தம் 1300 உரைகளை அவர் நிகழ்த்தியுள்ளாராம்.

அத்தனையும் ரெக்கார்டுண்ணே...!

அத்தனையும் ரெக்கார்டுண்ணே...!

பிரதமர் ஆற்றிய உரைகள் குறித்த தொகுப்பு பிரதமர் அலுவலகத்தின் இணையதளத்தில் போட்டு வைத்துள்ளனர். அதில் 2004 ஜூன் 24ம் தேதி முதல் பிரதமர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.

3325 நாட்களில்

3325 நாட்களில்

அதாவது பிரதமர் மன்மோகன் சிங் 3325 நாட்களில் இந்த 1300 உரைகளை நிகழ்த்தியுள்ளார்.

3 நாளைக்கு ஒரு வாட்டி!

3 நாளைக்கு ஒரு வாட்டி!

அதன்படி சராசரியாக 3 நாட்களுக்கு ஒரு உரை என்ற விகத்தில் பேசியுள்ளார் பிரதமர்.

அங்க பேசாட்டி என்ன...!

அங்க பேசாட்டி என்ன...!

பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவது என்பது மிக மிக அரிது. இருப்பினும் நிகழ்ச்சிகளில் அவர் அடிக்கடி பேசி வருகிறார்.

பற்ந்து பற்ந்து...

பற்ந்து பற்ந்து...

செய்தியாளர்களை தனியாக சந்திக்காவிட்டாலும் கூட தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது கூட வரும் செய்தியாளர்களிடம் விரிவாகப் பேசுவது பிரதமரின் வழக்கம். அப்போதுதான் அவர் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் கருத்து தெரிவிப்பாரும் கூட.

இனிமேலும் பிரதமரைப் பார்த்து யாரும் பேசாதவர் என்று கூற முடியாது.. மாறாக, வடிவேலு படத்தில் வருவது போல ரொம்பப் பேசற நீ.. ரொம்பப் பேசற நீ.. என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம்!

English summary
He may be accused by critics of keeping silent in the midst of a crisis but Prime Minister Manmohan Singh may have set a record of sorts by delivering 1,300 speeches during his record tenure in office beginning May 2004. Starting June 24, 2004, the PM's website has a faithful record of all of them. Singh has been PM for a little over nine years or around 3,325 days and this means he has delivered a speech at least every third day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X