For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூக்கை குறைக்க கோரும் மனுவை விசாரிக்க ஐவர் அரசியல் சாசன பெஞ்ச்: தலைமை நீதிபதி சதாசிவம்

By Mathi
Google Oneindia Tamil News

Verdict by larger benches to sort out mercy plea issue: CJI
டெல்லி: கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க தாமதம் ஆவதை சுட்டிக் காட்டி தூக்கு தண்டனைய குறைக்கக் கோரும் மனுக்களை விசாரிக்க 5 நீதிபதிகளைக் கொண்ட தனி அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் தெரிவித்துள்ளார்.

தூக்கு தண்டனை கைதிகள் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுபுகின்றனர். அந்த மனு நிராகரிக்கப்பட்ட பின்னர் தாமதமாக முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அதை சுட்டிக்காட்டி தூக்கை குறைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படுகிறது. அப்படியான வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளன.

இது தொடர்பாக தலைமை நீதிபதி சதாசிவத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இதுபோன்ற விஷயங்களில் 2 அல்லது 3 நீதிபதிகளைக் கொண்ட சிறிய பெஞ்சுகள் முரண்பாடான தீர்ப்புகளை அளிக்கின்றன. இந்த முரண்பாடுகளை தீர்த்து அதிகாரப்பூர்வ தீர்ப்பு வழங்க 5 நீதிபதிகளைக் கொண்ட ஒரு அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்படும். அந்த பெஞ்சு மட்டுமே இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும்.

முதல்கட்டமாக, கருணை மனு மீது தாமதமாக முடிவு எடுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டி தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்க ஒரு மாதத்துக்கு மட்டும் 5 நீதிபதிகளைக் கொண்ட ஒரு அரசியல் சட்ட பெஞ்சை அமைக்க திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.

English summary
Chief Justice of India P Sathasivam has said an authoritative pronouncement by a larger Constitution bench would be made to settle divergent views on commutation of death penalty on the grounds of delay in deciding mercy pleas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X