For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாக்லெட் ஆசையில் மனித வெடிகுண்டுகளாக மாறும் ‘தாலிபன்’ சிறார்கள்

Google Oneindia Tamil News

Chocolates for being human bomb: Taliban lures starving kids
லண்டன்: விவரமறியா பாலகர்களுக்கு சாக்லெட் வாங்கித் தருவதாக ஆசை காட்டி, பயங்கரவாதத்தை தாலிபன்கள் விரிவு படுத்தி வருவதாக நெஞ்சை உறைய வைக்கும் ஆவணப்படம் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.

உணவுக்காக வாடி வரும் ஆப்கன் குழந்தைகள் மனதில், சாக்லெட் மற்றும் மற்ற இனிப்புகள் ஆசைகளைத் தூண்டி அவர்களை மனித வெடிகுண்டுகளாக தாலிபன்கள் காட்டுவதாக அந்த ஆவணப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. மேலும், அக்குழந்தைகளின் குடும்பத்தினருக்கு பெரும் பண் உதவியும் தாலிபன்கள் சார்பில் அளிக்கப்படுவதாக தெரிகிறது.

அதிலும் குறிப்பாக தாலிபன்கள் கடத்திச் செல்லும் குழந்தைகளின் வயது 8 அல்லது அதற்கு மேற்பட்டதாம். இந்த வயதில் தான் அவர்களிடம் துப்பாக்கி மற்றும் வெடிபொருள் உபகரணங்களையும் கையாள தாலிபான் கற்றுத் தருவதாக அந்த ஆவணப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.

தற்போது அனாதை ஆசிரமத்தில் வசித்து வரும் முன்னாள் தாலிபன் போராளியான நியாஸ் என்பவர் கூறுகையில், ‘ நான் தாலிபான்கள் கடத்தப்படும் போது தனக்கு 8 வயது. சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூரி என்னை அழைத்து வந்தார்கள். பிறகு வெடிகுண்டு ஒன்றை கொடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்க கட்டளையிட்டார்கள். அதிர்ஷ்டவசமாக நான் போலீசார் வசம் சிக்கிக் கொண்டேன். இல்லையென்றால் மனித வெடிகுண்டு என்ற பெயரில் பலியாகி எத்தனை பேரை கொன்றிருப்பேனோ' என்றார்..

ஆப்கானிஸ்தானின் விருது பெற்ற இயக்குனர் நஜிபுல்லா குரேஷி இது குறித்து கூறுகையில், 'ஆயிரக்கணக்கான குழந்தைகள் இன்னமும் தாலிபான்களால் தேர்வு செய்யப்பட்டு மனித வெடிகுண்டாக மாற்றப்படுகின்றனர். அல்லது வெடிகுண்டுகள் செய்ய கற்றுத் தரப்படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

English summary
The Taliban is bribing children as young as eight with sweets to become suicide bombers. A new documentary has revealed that these starving orphans are lured with chocolate and money to wear bomb belts or grenade vests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X