For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெறைஞ்ச பெளர்னமிதான் 'ராசா' பொறக்கக் காரணம்... பிரிட்டிஷ் பாட்டிகளின் பொக்கைவாய்க் கதைகள்!

Google Oneindia Tamil News

லண்டன்: நிறைந்த பெளர்னமியால்தான் கேட் மிடில்டனுக்கு பிரசவம் ஆகியிருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பாட்டிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

நம்ம ஊர் திண்ணைப் பஞ்சாயத்துப் போலத்தான் இங்கிலாந்தும். ஏதாவது ஒன்று என்றால், அதிலும் ராஜ குடும்பத்தில் ஏதாவது நிகழ்ச்சி என்றால் ஆளாளுக்கு உட்கார்ந்து பேசத் தொடங்கி விடுவார்கள்.

அந்த டாப்பிக் குறித்து அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து ஒரு வழி பண்ணி விடுவார்கள். தற்போது கேட் மிடில்டனுக்குப் பிறந்த குழந்தை குறித்த விவாதங்கள் அங்கு பட்டையைக் கிளப்பி வருகின்றன.

குத்த வச்சு கதை சொல்லு வெள்ளையம்மா...

குத்த வச்சு கதை சொல்லு வெள்ளையம்மா...

இளவரசி கேட் மிடில்டனுக்கு பிரசவ வலி ஏற்பட ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிறைந்த முழு பெளர்னமிதான் என்பது இந்த பாட்டிகள் அடித்துச் சொல்லும் கருத்தாகும்.

நிலவின் சக்தின்னா சும்மாவா...

நிலவின் சக்தின்னா சும்மாவா...

நிலவின் ஈர்ப்பு சக்திதான் கேட் மிடில்டனுக்கு ஏற்பட்ட பிரசவ வலிக்குக் காரணம் என்றும் இந்த மூதாட்டிகள் சொல்கிறார்கள்.

பிரவசங்களுக்கு நிலவும் ஒரு காரணம்

பிரவசங்களுக்கு நிலவும் ஒரு காரணம்

இதுகுறித்து மெர்வி ஜோக்கினன் என்பவர் கூறுகையில், நிலவின் ஈர்ப்பு சக்தியே பிரவசங்களுக்கு பெரும்பாலும் காரணம் என்பது எங்களது கருத்தாகும் என்ரார்.

பெளர்னமின்னாலே பிசிதான்...

பெளர்னமின்னாலே பிசிதான்...

வயதான நர்ஸ்கள் சிலர் கூறுகையில், பெளர்னமி என்றாலே நாங்கள் பிசியாகி விடுவோம். காரணம் அன்று பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரசவ வலி ஏற்படும் என்றனர்.

20 வருஷத்துக்கு முன்னாடி...

20 வருஷத்துக்கு முன்னாடி...

20 வருடங்களுக்கு முன்பு தேம்ஸ் அருகே ஒரு மருத்துவமனையில் ஆறு கொந்தளிப்புடன் காணப்பட்டதாம். அன்றைய தினம் அந்த மருத்துவமனையில் நிறையப் பிரசவங்கள் நடந்ததாம்.

ஏன் அப்படி...?

ஏன் அப்படி...?

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம், பெளர்னமியன்று நீரில் சலனம் ஏற்படும். இதனால்தான் கடல்கள் கொந்தளிக்கின்றன. அதேபோலத்தான் பனிக்குடத்தில் தண்ணீரால் சூழப்பட்டிருக்கும் நிலையில் பிரசவ வலி ஏற்படுகிறது என்பது இவர்கள் சொல்லும் காரணம்.

இது நெஜமா என்று டாக்டர்கள்தான் விளக்க வேண்டும்!

English summary
To many, its powers to bring on labour are nothing more than an old wives’ tale. But speculation was mounting yesterday as to whether Sunday night’s bright full moon had triggered the duchess’s first contractions. While most will say nature had simply run its course, some believe the theory that suggests the moon’s gravitational pull can influence embryonic fluid around a child in the womb in much the same way as it affects the tide.
 Mother nature: Theories as to what kick-started the Duchess of Cambridge's labour include the lunar cycle and the weather
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X