For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சபாஷ்...ஒடிஷா, பீகாரில் ஏழைகளின் சதவீதம் கணிசமாக குறைந்தது!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஒடிஷா மற்றும் பீகாரில் ஏழைகளின் சதவீதம் கணிசமாக குறைந்து இருப்பதாக திட்டக் குழுவின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பீகார், ஜார்க்கண்ட், ஒடிஷா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பழங்குடி இனத்தவர் பெரும்பகுதியினராக வசித்து வருகின்றனர். இந்த மாநிலங்களில் ஏழைகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஏழைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

2004-2005ஆம் நிதி ஆண்டில் இருந்த ஏழைகள் நிலைமையையும் 2011-12ஆம் ஆண்டு ஏழைகள் நிலைமையையும் ஒப்பீடு செய்து ஒரு ஆய்வறிக்கையை திட்டக் குழு வெளியிட்டிருக்கிறது. இதில் பீகார், ஒடிஷா ஆகிய மாநிலங்களில் கணிசமான அளவில் ஏழைகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

ஏழை என்பதற்கு அளவு என்ன?

ஏழை என்பதற்கு அளவு என்ன?

வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் ஏழைகள் என்பதற்கு வரையறாக கிராமப் புறங்களில் நாளொன்றுக்கு ரூ27.20 அல்லது அதற்குக் குறைவான வருவாய் பெறுவோர் ஏழைகள். நகர்ப்புறங்களில் நாளொன்றுக்கு ரூ33.30 பெறுவோர் ஏழையாவார். இருப்பினும் சில மாநிலங்களில் இது வேறுபடுகிறது.

ஏழைகள் எவ்வளவு பேர்?

ஏழைகள் எவ்வளவு பேர்?

2004-2005 ஆம் ஆண்டில் நாட்டின் கிராம புறங்களில் 326 மில்லியன் ஏழைகளும் நகரங்களில் 81 மில்லியன் ஏழைகளும் இருந்தனர். இது 2011-12ஆம் ஆண்டில் 217 மில்லியன் மற்றும் 53 மில்லியனாக குறைந்து போயுள்ளதாம்.

ஒடிஷா

ஒடிஷா

நாட்டிலேயே அதிக ஏழைகள் இருந்த மாநிலம் ஒடிஷா. ஆனால் 2004-05ஆம் ஆண்டில் 57% ஆக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை 2011-12ல் 32.6%ஆக குறைந்து போயுள்ளது.

பீகாரில்...

பீகாரில்...

2004-05ஆம் ஆண்டில் பீகாரில் 54.4% ஏழைகள் இருந்தனர். இது 2011-12ஆம் ஆண்டில் 33.74% ஆக குறைந்துள்ளது.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்

2004-05ஆம் ஆண்டில் 48.8% ஆக இருந்த ஏழைகளின் எண்ணிக்கை 2011-12ல் 31.6% ஆக குறைந்துள்ளது.

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநிலத்திலும் கூட 2004-05ஆம் ஆண்டில் 49.4% இருந்த ஏழைகளின் எண்ணிக்கை 2011-12ஆம் ஆண்டில் 39.93%ஆக குறைந்துள்ளது.

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலத்திலும் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2004-05 ஆம் ஆண்டில் 45.3% இருந்த ஏழைகள் எண்ணிக்கை 2011-12-ல் 36.96%ஆக குறைந்துள்ளது.

கோவா

கோவா

கோவாவில் கடந்த 2004-05ஆம் ஆண்டில் 24.9% ஆக இருந்த ஏழைகள் எண்ணிக்கை 2011-12ஆம் ஆண்டு வெறும் 5.09% ஆகக் குறைந்துள்ளது.

கேரளா

கேரளா

கேரளாவில் 19.6%-ல் இருந்து 7.05% , புதுச்சேரியில் 14.2%-ல் இருந்து 9.69% ஆக குறைந்துபோயுள்ளது.

English summary
Odisha and Bihar have registered the sharpest decline in poverty levels between 2004-05 and 2011-12, although the proportion of the poor in these states remains well above the national average.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X