For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முடியப் போகிறது கவுன்சிலிங்... ஹாயாக காற்று வாங்கப் போகும் 80,000 பிஇ சீட்கள்

Google Oneindia Tamil News

சென்னை: அரசு ஒதுக்கீட்டின் கீழ் தமிழக பொறியியல் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்ட பிஇ மாணவர் இடங்களில் இதுவரை வெறும் 55 சதவீத இடங்களே நிரம்பியுள்ளன. மற்றவை வழக்கம் போல காலியாக கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீப காலமாக தமிழக பொறியியல் கல்லூரிகளில் பெருமளவிலான மாணவர் இடங்கள் காலியாகக் கிடக்கும் நிலை அதிகரித்து வருகிறது.

ஆண்டுக்கு ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கல்லூரிகளின் அடிப்படைக் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த இடங்கள் நிரம்பாமல் போய் விடுகிறது.

இதுவரை 55 சதவீதம் மட்டுமே

இதுவரை 55 சதவீதம் மட்டுமே

இந்தக் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் பொறியியல் இடங்களில் இதுவரை 55 சதவீத இடங்களே நிரம்பியுள்ளன.

80,000 சீட்கள் காலி

80,000 சீட்கள் காலி

கிட்டத்தட்ட 80,000 இடங்கள் இன்னும் நிரம்பவில்லை. அவை நிரம்பவும் வாய்ப்பில்லையாம்.

520 கல்லூரிகள்

520 கல்லூரிகள்

தமிழகத்தில் 520 அரசு , அரசு உதவி பெறும், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், தனியார் சுய நிதி பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

மொத்த இடங்கள் 2,05,268 இடங்கள்

மொத்த இடங்கள் 2,05,268 இடங்கள்

இந்தக் கல்லூரிகளில் மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 268 இடங்கள் உள்ளன.

இதுவரை 1,15,546 இடங்களே ஃபுல்

இதுவரை 1,15,546 இடங்களே ஃபுல்

இதில் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்து 546 இடங்களே நிரம்பியுள்ளனவாம். இன்னும் ஒரு வாரம்தான் கவுன்சிலிங் முடிய உள்ளது.

மெக்கானிக்கல்தான் டாப்

மெக்கானிக்கல்தான் டாப்

நடப்பு ஆண்டிலும் மெக்கானிக்கல் என்ஜீனியரிங் பிரிவுதான் மாணவர்கள் மத்தியில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதாவது 30, 256 பேர் இந்தப் பிரிவைத் தேர்வு செய்துள்ளனர்.

2வது இடத்தில் இசிஇ

2வது இடத்தில் இசிஇ

2வது இடத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜீனியரிங் பாடப் பிரிவு உள்ளது. இந்தப் பிரிவை 23,615 பேர் தேர்வு செய்துள்ளனர்.

கவுன்சிலிங்குக்கு வரா 49,194

கவுன்சிலிங்குக்கு வரா 49,194

கவுன்சிலிங்குக்கு அழைத்தும் 49,194 மாணவ, மாணவியர் வரவே இல்லை.

நேற்றைய நிலவரப்படி 89,722 காலியிடம்

நேற்றைய நிலவரப்படி 89,722 காலியிடம்

நேற்றைய நிலவரப்படி 89,722 இடங்கள் காலியாக இருந்தன.

எப்படியும் 80,000 இடங்கள் நிரம்பாது

எப்படியும் 80,000 இடங்கள் நிரம்பாது

கவுன்சிலிங்கின் முடிவில் எப்படியும் 80,000 இடங்கள் நிரம்பாமல் காலியாகவே இருக்கும் என்று தெரிகிறது.

கடந்த வருடத்தை விட மோசம்

கடந்த வருடத்தை விட மோசம்

கடந்த ஆண்டு 50,000 இடங்கள் காலியாக கிடந்தன. இந்த முறை அதை விட அதிக இடங்கள் நிரம்பாமல் போகும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இமேஜ் பார்த்து சேர விரும்பும் மாணவர்கள்

இமேஜ் பார்த்து சேர விரும்பும் மாணவர்கள்

முன்பெல்லாம் கல்லூரி கிடைத்தால் போதும் என்று மாணவர்கள் நினைத்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. கல்லூரிக்கு நல்ல இமேஜ் இருக்கிறதா, பெயர் இருக்கிறதா, கோர்ஸுக்கான வசதிகள் உள்ளனவா என பலதையும் அலசி ஆராய்ந்த பின்னரே சேர முன்வருகிறார்கள் மாணவர்கள். இதனால்தான் பல கல்லூரிகளுக்கு ஆளே கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாம்.

கம்ப்யூட்டர் சயின்ஸுக்கு மவுசு குறைகிறது

கம்ப்யூட்டர் சயின்ஸுக்கு மவுசு குறைகிறது

மாணவர்கள் மத்தியில் மெக்கானிக்கல், சிவில், டிரிபிள் இ எனப்படும் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் என்ஜீனியரிங் ஆகிய பிரிவுகளுக்குத்தான் நல்ல கிராக்கி காணப்படுகிறது. அதேசமயம், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளுக்கு ஆதரவு குறைந்து வருகிறது.

English summary
With just 55 per cent of the government quota seats getting filled in engineering counselling this year, academicians expect about 80,000 seats to go vacant this year. According to statistics provided by the Tamil Nadu Engineering Admissions (TNEA), there are 2,05,268 seats available in over 520 government, government-aided, Anna University's constituent college and private engineering colleges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X