For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உளவுத்துறைஎச்சரிக்கை: தமிழக-கர்நாடக எல்லையில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தர்மபுரி: தமிழக-கர்நாடக எல்லையோரப் பகுதிகளில் உள்ள காவல்நிலையங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்போவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து அங்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட தமிழக - கர்நாடக எல்லைப் பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களை மாவோயிஸ்டுகள் தாக்கப்போவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து எல்லைப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் கர்நாடகா வழியாக செல்லும் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகே, தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன.

குறிப்பாக மேட்டூரை அடுத்துள்ள கொளத்தூர் காவல்நிலையத்தை தாக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு இருபத்தி நான்கு மணி நேரம் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கொளத்தூர் வழியாக மைசூர் செல்லும் பாதையில் எல்லைப் பகுதியான பாலாற்றில், தமிழக காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது கொளத்தூர் காவல் நிலையத்திற்கு இதேபோன்று பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

English summary
Armed police teams have been posted in TN - Karnataka border after the warning of IB on planned attack on police stations by Maoists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X