For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேட்ட வரம் கொடுக்கும் மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

By Siva
Google Oneindia Tamil News

Durga Stalin visits Moongilanai Kamakshi Amman temple
தேனி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவிலில் திமுக பொருளாளர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா சாமி தரிசனம் செய்தார்.

தேனியில் திமுக சார்பில் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் திமுக பொருளாளர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். அவரது மனைவி துர்கா நேற்று நண்பகல் 12 மணிக்கு தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

கோவிலுக்கு வந்தவர் ஸ்டாலினின் மனைவி என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் பிரகாரத்தை சுற்றிவிட்டு சாமி தரிசனம் செய்துவிட்டு 12.10 மணிக்கு அங்கிருந்து கிளம்பிச் சென்றார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் போஸ், மாவட்ட பொருளாளர் அருணா சேகர் மற்றும் கட்சியினர் வந்திருந்தனர்.

துர்கா கோவிலில் இருந்து கிளம்பிய பிறகு தான் சாமி தரிசனம் செய்தவர் ஸ்டாலினின் மனைவி என்று தெரிய வந்துள்ளது. மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவிலில் உள்ள அம்மனை வழிபட்டால் பிரச்சனைகள் தீரும், கேட்ட வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

English summary
DMK treasurer MK Stalin's wife Durga visited the Moongilanai Kamakshi Amman temple in Devadanapatti on tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X