For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7.2 கோடி வயதுடைய டைனோசரின் வால் சிக்கியது... பாடி எங்கே?

Google Oneindia Tamil News

மெக்சிகோ சிட்டி:மெக்சிகோ நாட்டு பாலைவனம் ஒன்றில் 7.2 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் வால் பகுதி படிமமாக கிடைத்துள்ளது. அந்த வாலுக்குரிய டைனோசரின் உடல் எங்கேயாவது இருக்கிறதா என்ற ஆராய்ச்சியில் தற்போது விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.

மிகவும் அரிதாக இந்த வால் பகுதியானது முழுமையாக, பாதுகாக்கப்பட்ட நிலையில் கிடைத்துள்ளது விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மெக்சிகோவில் டைனோசரின் படிமம் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

பாசில் வடிவில்

பாசில் வடிவில்

இந்த டைனோசர் வாலானது, பாசில் எனப்படும் படிம வடிவில் கிடைத்துள்ளது. வடக்கு மெக்சிகோவில் உள்ள பாலைவனப்பகுதியில் இந்த படிமம் காணப்படுகிறது.

ஐந்து அடி நீள வால்

ஐந்து அடி நீள வால்

இந்த வால் பகுதியானது 5 அடி நீளத்திற்கு உள்ளது. மெக்சிகோவில் கிடைத்த முதல் டைனோசர் படிமம் இதுதான்.

ஹாட்ரசோர்

ஹாட்ரசோர்

இது டைனோசரின் ஒரு வடிவமான ஹாட்ரசோர் என்ற வகையைச் சேர்ந்ததாகும்.

பாதி டைனோசர்

பாதி டைனோசர்

ஒரு டைனோசரின் பாதி உருவத்திற்குச் சமம் இந்த வால் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அப்படியே இருக்கிறது

அப்படியே இருக்கிறது

வால் பகுதியானது துண்டாகவில்லை. மாறாக முழுமையாக அப்படியே கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 20 நாட்கள் கஷ்டப்பட்டு மண்ணைத் தோண்டி இந்த படிமத்தை தற்போது முழுமையாக வெளிக்கொணர்ந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

எலும்புகள் பத்திரம்

எலும்புகள் பத்திரம்

வால் பகுதியின் எலும்புகள் அப்படியே கல்லாகியுள்ளன. பாறை வடிவில் காணப்படும் இவை அனைத்தும் சேதமடையாமல் முழுமையாக கிடைத்துள்ளன.

இடுப்பும் இருக்கிறது

இடுப்பும் இருக்கிறது

வால் பகுதிக்கு அருகில் சில எலும்புகள் சிதறிக் கிடந்தன. அவை அந்த டைனோசரின் இடுப்பு பகுதி என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வாத்து மாதிரியே...

வாத்து மாதிரியே...

ஹாட்ரசோர் டைனோசருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்றால் பார்க்க அதன் தலையானது தற்போதைய வாத்து போலவே இருக்குமாம். இதனால்தான் வாத்து வடிவிலான டைனோசர் என்று அதற்குப் பெயர் வைத்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான பற்கள்

ஆயிரக்கணக்கான பற்கள்

இதன் வாய்ப் பகுதியில் ஆயிரக்கணக்கில் பற்கள் இருந்ததாம். இந்த பற்களை வைத்து தான் உண்ணும் ஆகாரத்தை முதலில் நன்றாக பொடித்து கூழாக்கி விடுமாம் இந்த டைனோசர். பிறகுதான் வயிற்றுக்குள் தள்ளுமாம்.

வெஜிட்டேரியன் பிராணி

வெஜிட்டேரியன் பிராணி

இந்த ஹாட்ரசோரானாது சாதாரண தாவர வகைகளைத்தான் சாப்பிடுமாம். பெரிய அளவில் தேடிப் போயெல்லாம் சாப்பிடாதாம்.

English summary
A team of archaeologists have discovered the fossilised remains of a 72 million-year-old dinosaur tail in a desert in northern Mexico, it has been announced. The 'unusually well-preserved' five yard-long tail was the first ever found in Mexico, said Francisco Aguilar, director of the country's National Institute for Anthropology and History. The team, made up of archaeologists and students from INAH and the National Autonomous University of Mexico, identified the fossil as a hadrosaur, or duck-billed dinosaur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X