For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னால முடியலங்கை.. மாடி ஏற முடியாமல் படியிலேயே படுத்துத் தூங்கும் 'குண்டர்'!

Google Oneindia Tamil News

டப்ளின்: அயர்லாந்தைச் சேர்ந்த 44 வயதான ரிட்சி டோயில் என்பவர் தனது உடல் எடையால் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளார்.

தனது சொந்த வீட்டில் படுத்துத் தூங்கக் கூட அவரால் முடியவில்லை. அதாவது வீட்டுக்குள்ளேயே போக முடியவில்லை. காரணம், பல மாடிப் படிகளை ஏறிக் கடக்க முடியாமல் படியிலேயே படுத்துத் தூங்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாராம். நடந்து நடந்து காலெல்லாம் புண்ணாகி பார்க்கவே படு பரிதாபமாக இருக்கிறது இவரது நிலை.

அந்த பரிதாபத்துக்குரியவரின் பெயர் ரிட்சி டோயில். 44 வயதாகும் இவர் பான்ட்ரி என்ற ஊரில் வசித்து வருகிறார். தனக்கு கீழ்த்தளத்தில் ஏதாவது ஒரு வீட்டை ஒதுக்கிக் கொடுக்குமாறும் அவர் நகராட்சிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். படியே இல்லாத வீடாக இருந்தால் ரொம்பப் புண்ணியமாகப் போகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் இல்லாமல் முடியாது

ஆக்சிஜன் இல்லாமல் முடியாது

கொஞ்சம் கூட இவரால் நடக்க முடியாதாம். அப்படியே நடந்தாலும் உடனே ஆக்சிஜன் ஏற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு விடுமாம்.

டப்ளினில் பிறந்தவர்

டப்ளினில் பிறந்தவர்

டப்ளினில் பிறந்தவர் டோயில். கடந்த ஒரு வருடமாக மாடியில் உள்ள வீட்டுக்குப் போக முடியாமல் படியிலேயே கழித்து வருகிறார் இவர்.

நாளுக்கு நாள் மோசம்

நாளுக்கு நாள் மோசம்

தனது நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக கூறும் டோயில், தனக்கு கீழ்த்தளத்தி்ல இருப்பது போல வீடு கிடைத்தால் நல்லது என்று அதற்காக விண்ணப்பித்து போராடி வருகிறார்.

வாகன புகையால் அவதி

வாகன புகையால் அவதி

மாடிப் படியிலேயே தங்கியிருப்பதால் சாலையில் போகும் வாகனங்களிலிருந்து வெளியாகும் புகை மாசு வேறு இவரை சிரமப்படுத்தி வருகிறதாம். தனது உடலில் கார்பன் மோனாக்சைட் விஷம் ஏறி வருவதாக டாக்டர்கள் கூறியுள்ளதாகவும் சொல்கிறார் டோயில்.

பாத்ரூம் வரைக்கும் போய் விடுவேன்

பாத்ரூம் வரைக்கும் போய் விடுவேன்

கீ்ழ்த்தளத்தில் உள்ள பாத்ரூமுக்கு மட்டுமே அவர் நடந்து போகிறார். மற்றபடி மறுபடியும் படியிலேயே வந்து செட்டிலாகி விடுகிறார்.

கடும் வெயிலில் அவதி

கடும் வெயிலில் அவதி

தற்போது அயர்லாந்தில் செமத்தியான வெயில் காலம். எனவே காற்று இல்லாமல், வியர்வையில் குளித்துக் கொண்டிருக்கிறாராம் ரிட்சி. அது வேறு இவரை கஷ்டப்படுத்துகிறதாம்.

English summary
A 42 stone Irish man has been forced to sleep on his floor downstairs after becoming too large to climb his staircase. Ritchie Doyle, 44, from Bantry, County Cork, is demanding that his local council move him to more suitable accommodation. He has ulcerated legs and relies on the use of an oxygen ventilator. Mr Doyle, who was born in Dublin, says he has been on the waiting list for a home for over a year now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X