For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

23 குழந்தைகள் பலி: சத்துணவுப் பணியாளார்கள் ஸ்டிரைக் - பசியில் 1.5 கோடி பள்ளிச் சிறார்கள்

Google Oneindia Tamil News

1.5 crore kids go hungry as Bihar teachers stay off midday meal duties
பாட்னா: சென்ற வாரத்தில் மதிய உணவு சாப்பிட்ட 23 பள்ளிக் குழந்தைகள் பலியான விவகாரத்தில், சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பீகாரில் ஒன்றரை கோடி பள்ளிக்குழந்தைகள் உணவின்றி அல்லாடும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

பீகாரில் சென்ற வாரம், உணவு விஷமாக மாறியதால், மதிய உணவு உட்கொண்ட 23 பள்ளிக்க்குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர். இது அஜாக்கிரதையால் ஏற்பட்ட விபத்து எனக் கூறி, தலைமறைவாக இருந்த அப்பள்லியின் தலைமை ஆசிரியரை நேற்று கைது செய்துள்ளனர் போலீசார். இந்நிலையில், தங்களது பணிக்கு பாதுகாப்பு வேண்உம் எனக் கூறி, பீகாரில் சத்துணவுப் பணியாளார்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதிய உணவிற்காகவே பள்ளிக்குச் செல்லும் வறிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் பீகாரில் அதிகம். சத்துணவும் பணியாளார்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், சுமார் 70,000 பள்ளிகளில் பயிலும், 1.5 கோடி பள்ளி மாணவர்கள்

ஆனால், சத்துணவுப் பணியாளர்களோ, பீகாரில் உள்ள பல பள்ளிகளில் சத்துணவு தயாரிக்க போதிய இடம் இல்லாமல், அவல நிலையில் உள்ளது. எங்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்காதவரை, சத்துணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட மாட்டோம். மேலும், எங்களை இந்த பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, வேறு ஏதேனும் தன்னார்வ அமைப்பிடம் சத்துணவு தயாரிக்கும் பொறுப்பை அளித்து விடுங்கள் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், மிக மோசமான பொருளாதார நிலையில் இருக்கும் பீகார் அரசோ, அவ்வாறு ஒரு தனியார் அமைப்பை சத்துணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்துவது என்பது சாத்தியமில்லாத விஷயம் எனத் தெரிவித்துள்ளது..

English summary
More than 1.5 crore schoolchildren in Bihar were not served their midday meal on Thursday after nearly three lakh government teachers washed their hands off the centrally-funded scheme on the grounds that it constituted non-academic work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X