For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ2க்கு செக் கொடுத்த ஹரியானா அரசு: வெள்ள நிவாரணம் கேட்ட விவசாயிகள் ஆவேசம்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர் இழப்பீட்டு தொகைக்கான காசோலைகளில் ரூ2 முதல் ரூ6 வரை எழுதப் பட்டிருந்தது கண்டு விவசாயிகள் ஆத்திரமடைந்துள்ளனர்.

ஹரியானா பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு கடும் வெள்ளப்போக்கு ஏற்பட்டது. இதில், அப்பகுதி விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர். அவர்களது பயிர்கள் எல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் நிவாரண உதவி கேட்டு அரசிடம் முறையிட்டனர்.

விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்த ஹரியானா அரசு, விவசாயிகளுக்கு நிவாரண நிதிக்கான பணத்தை காசோலைகளாக வழங்கியது. மகிழ்ச்சியோடு நிவாரணா நிதி காசோலைகளைப் பெற்றுக் கொண்ட விவசாயிகள் தற்போது ஆத்திரமடைந்துள்ளனர்.

காரணம் அவர்களுக்கு வழங்கப் பட்ட காசோலைகளில் ரூ 2, ரூ 3 மற்றும் ரூ6 வரையிலான ரூபாய் நிவாரண நிதி எழுதப்பட்டிருந்தது தான். இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் இந்தக் காசோலைகள் எங்களை அவமானப் படுத்துவது போல் உள்ளது எனக் கூறி அவற்றை நிராகரித்து விட்டனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹரியானா அமைச்சர் புபைன்டர் சிங் ஹோடா கூறுகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எம்.ஏல்.ஏ.கள் மற்றும் பிற அதிகாரிகள் இணைந்து இந்த தொகையினை வழங்கியுள்ளோம் எனவும் இந்த இழப்பீட்டுத் தொகையானது சரியான தொகையாகும் என பதிலுரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Haryana ministers are known to spoil themselves with luxuries like the most-expensive SUVs but when it comes to doing something for the state's farmers, the story is a little different. The self-proclaimed farmer-friendly Haryana government has doled out cheques worth royal amounts ranging from Rs.2-6 to a number of farmers of Jhajjar district as compensation for their damaged crops
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X