For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டேப்லெட், செல்போன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: செல்போன், டேப்லெட் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை ஓரிரு மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளதாக தலைமை பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.

தற்போது, பாஸ்போர்ட் பெற நேரிலோ அல்லது இணையதளம் மூலமாகவோ பொதுமக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதனையும் எளிமைப்படுத்த பாஸ்போர்ட் அலுவலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

செல்போன், டேப்லெட் கம்ப்யூட்டர் மூலமும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முடியும். அதற்கான நடைமுறைகள் ஒரிரு மாதங்களில் அமலுக்கு வரும் என்று பாஸ்போர்ட் அலுவலக தலைமை அதிகாரி முக்தேஷ் கே. பர்தேசி தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், விண்ணப்பம் எந்தப் பிரிவில் உள்ளது, அதன் தற்போதைய நிலை உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நாடுமுழுவதும் 74 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த ஆண்டு அது இரண்டு மடங்காகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 6 மாதங்களில் மட்டும் இதுவரை 37 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறினார். இணையதளம் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை வெற்றி பெற்றுள்ளதாகவும் தலைமை பாஸ்போர்ட் அதிகாரி மேலும் கூறியுள்ளார்.

English summary
You can soon apply for a passport using your smart phones and tablets. The Passport Office is working on a technology platform that will enable people to use mobiles to download application, apply and pay for a passport. The mobile can also be used to track the status of the application through various stages, apart from locating the nearest passport seva Kendra and downloading other relevant information.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X