For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசியலில் குதித்தார் விக்கிலீக்ஸ் அசாஞ்சே.. ஆஸி. தேர்தலில் 2 இந்தியர்களுக்கு சீட்

Google Oneindia Tamil News

சிட்னி: அமெரிக்காவின் உளவு முகத்தை உலகம் முழுவதும் அம்பலப்படுத்திய பெரும் பரபரப்பூட்டிய விக்கீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார்.

பிறப்பால் ஆஸ்திரேலியரான இவர், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் செனட் தேர்தலில் தனது கட்சியை களம் இறக்கியுள்ளார்.

இத்தேர்தலில் 2 இந்திய வம்சவாளியினருக்கும் அவர் தேர்தலில் சீட் கொடுத்துள்ளார்.

மொத்தம் 7 வேட்பாளர்கள்

மொத்தம் 7 வேட்பாளர்கள்

மொத்தம் 7 வேட்பாளர்களை அசாஞ்சே இதுவரை அறிவித்துள்ளார். அதில் 2 பேர் இந்திய வம்சவாளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனிலிருந்து பிறந்த கட்சி

லண்டனிலிருந்து பிறந்த கட்சி

லண்டனிலிருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது கட்சியை தொடங்குவதாக அறிவித்தார் அசாஞ்சே.

விக்டோரியாவில் அசாஞ்சே போட்டி

விக்டோரியாவில் அசாஞ்சே போட்டி

மேலும் விக்டோரியா தொகுதியிலிருந்து தானே போட்டியிடுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்திய வேட்பாளர்கள் யார் யார்...?

இந்திய வேட்பாளர்கள் யார் யார்...?

மலேசியாவில் பிறந்தவரான பினோய் கம்ப்மார்க் விக்டோரியா மேல் சபைக்குப் போட்டியிடுகிறார். அதேபோல கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் என்பவர் மேற்கு ஆஸ்திரேலியாவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈகுவடார் தூதரகத்தில் அடைக்கலம்

ஈகுவடார் தூதரகத்தில் அடைக்கலம்

கைது நடவடிக்கைக்குப் பயந்து லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அடைக்கலம் புகுந்து அங்கேயே தங்கியிருக்கிறார் அசாஞ்சே என்பது நினைவிருக்கலாம்.

கெளரவமான அரசியல்

கெளரவமான அரசியல்

அசாஞ்சே கட்சியின் செய்தித் தொடர்பாளர் சமந்தா கிராஸ் கூறுகையில், கெளரவமான அரசியல், கெளரவமான அரசியல்வாதிகளுக்கு உத்தரவாதம் தரும் வகையில் அசாஞ்சே கட்சி செயல்படும் என்றார்.

English summary
2 Indian origin persons are among the seven candidates who will contest elections on a Wikileaks Party ticket in Senate polls in Australia. The party, launched by the whistleblowing website's founder Julian Assange via a videolink from London today, will also field him as a candidate from Victoria. Indian-origin academician Binoy Kampmark, who was born in Malaysia and has Bengali heritage will stand for the upper house election from Victoria. Also, Suresh Rajan, whose family has roots in Kerala will be party's candidate from Western Australia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X