For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உணவு பாதுகாப்பு மசோதா- மாயாவதி ஆதரவு

By Mathi
Google Oneindia Tamil News

Mayawati supports food scheme, says 'better late than never'
டெல்லி: உணவுப் பாதுகாப்பு மசோதாவை ஆதரிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு அவசரச் சட்டத்தை கொண்டு வந்துள்ள மத்திய அரசு, அந்த சட்டத்தை ஆகஸ்ட் 20-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த சட்டம் கொண்டு வந்து 6 மாதத்திற்குள் மசோதாவை பார்லிமென்ட்டில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். எனவே, வரும் மழைக்கால கூட்டத் தொடரில் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

இந்நிலையில் உணவு பாதுகாப்பு மசோதாவினை கொள்கை அடிப்படையில் ஆதரிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், தார்மீக அடிப்படையில் உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவு அளிக்கிறோம். நாங்கள் அதனை எதிர்க்கவில்லை. இந்த மசோதா வந்தால், ஏழை மக்கள் மானிய விலையில் உணவு பொருட்களை பெற முடியும்.

ஆனால் அவசர சட்டம் கொண்டு வந்தது சரியல்ல. பார்லிமென்ட்டில் தாக்கல் செய்து விவாதம் நடத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார்.

English summary
BSP supremo Mayawati on Saturday supported Centre's food security scheme but disapproved of its step to bring an ordinance, saying the measure should have been discussed in Parliament and passed with consensus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X