For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாங்கள் என்ன சோதனை விலங்குகளா? நாய்க்கு கொடுங்கள் உங்கள் மதிய உணவை... : சீறும் ம.பி ஆசிரியர்கள்

By Siva
Google Oneindia Tamil News

Mid-day meals: In Madhya Pradesh, meal tasting order goes to dogs
போபால்: பள்ளிகளில் சமைக்கப்படும் மதிய உணவை முதலில் குழந்தைகளுக்கு தருவதற்கு முன்னால் நாய்களுக்கு தந்து பரிசோதிக்கலாம் என மத்திய பிரதேச அரசுக்கு, ஜபல்பூர் ஆசிரியர்கள் அமைப்பு ஐடியா ஒன்றைக் கொடுத்துள்ளது.

கடந்த வாரத்தில், உணவு விஷமானதால் பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட 23 மாணவ-மாணவிகள் பரிதாபமாக பலியாகினர். அந்த பள்ளியின் தலைமையாசிரியையை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ஆசிரியர்கள் உணவை ருசி பார்த்த பின்னரே, மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது மத்தியப்பிரதேச அரசு. இதனைக் கேட்டு அதிர்ச்சியுற்ற ஜபல்பூர் ஆசிரியர்கள், ‘ மாணவர்களின் உயிர் முக்கியம் தான். ஆனால், அதற்காக ஆசிரியர்கள் சோதனை விலங்குகள் ஆக முடியாது. வேண்டுமானால், சமைத்த உணவை முதலில் ஒரு தெருநாய்க்கு வழங்கிப் பார்க்கலாம். பின்னர், 20 நிமிடம் காத்திருந்து, அதற்கு ஒன்ரும் நேரவில்லையென்றால், அந்த உணவை மாணாவர்களுக்கு தரலாம்' எனத் தெரிவித்துள்ளது.

English summary
Teachers in Jabalpur, Madhya Pradesh would rather have dogs taste midday meals than be guinea pigs themselves.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X