For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைக்கு மேல ‘ஆயிரம்’ வேலைப்பா... அலுத்துக் கொள்ளும் ‘ஜேக்’

Google Oneindia Tamil News

சான் பிரான்சிஸ்கோ: நம்மூரில் தலையில் ‘கரகம்' வைத்து ஆடுபவர்களைப் பார்த்தாலே நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். எப்படிப்பா... இப்படி தலையில் நிக்குது, கயிறு, கியிறு கட்டியிருப்பாய்ங்களோ என சந்தேகம் கூட எழுவதுண்டு.

அதே போல், சில நாய்களுக்கு வாயில் கவ்வி பொருளை எடுத்து வரப் பழக்கியிருப்பார்கள். ஆனால், சான் பிரான்சிஸ்கோவில் ஒரு நாய் நம்மூர் கரகாட்டக்காரர்களாஇயும் மிஞ்சும் வகையில், எல்லாப் பொருட்களையும் தலையில் சுமந்து வந்து எஜமானரிடம் தருகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா...?

இதோ, மிஸ்டர். ஜேக் ( அதாங்க அந்த நாய் பேரு...) பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க....

பாரின் நாய்...

பாரின் நாய்...

சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஜேக், ஆஸ்திரேலிய வகையைச் சேர்ந்தது.

மாங்குயிலே.. பூங்குயிலே...

மாங்குயிலே.. பூங்குயிலே...

இதன் தலையில் பிஸ்கட், புத்தகங்கள், எலெக்ட்ரிக் பல்பு, வாட்ச், சமையல் பாத்திரம் என எதை வைத்தாலும் அதை கீழே விழுந்து விடாத படி சுமந்து நடப்பது தான் இதன் சிறப்பு.

ரொம்ப ஸ்டடியாக்கும்...

ரொம்ப ஸ்டடியாக்கும்...

நடக்கும் போது தலையில் உள்ள பொருள் ஆடுவது இயல்பு தானே, ஆனால், அப்படி ஆடும் பொருட்களை கீழே விழுந்து விடாமல் சாமர்த்தியமாக அடி மேல் அடி வைத்து நடக்கிறது ஜேக்.

தண்ணீ பட்ட பாடு...

தண்ணீ பட்ட பாடு...

ஆச்சரியம் என்னவென்றால் ஒரு டம்ளாரில் தண்ணீர் வைத்து ஜேக்கின் தலையில் வைத்தால், தண்ணீர் ஒரு சொட்டு கூட சிந்தாமல் நடப்பதில் சாமர்த்தியசாலி ஜேக். முட்டையெல்லாம் இவருக்கு தண்ணீர் பட்ட பாடு.

ரசிகர் மன்றம்...

ரசிகர் மன்றம்...

இவ்வளவு பொறுப்பான ஜேக்கிற்கு ரசிகர்கள் இல்லாமல் இருப்பார்களா...? இணையதளத்தில் ரசிகர் பட்டாளமே உள்ளது.

சபாஷ், சரியான போட்டி...

சபாஷ், சரியான போட்டி...

பொதுவாகவே, நாய்க்கும் பூனைக்கும் ஆகாது. ஆனால், ஜேக்கிற்கு போட்டியாக பூனை ஒன்றும் களத்தில் இறங்கியுள்ளது சீனாவில்...

என்கிட்ட மோதாதே...

என்கிட்ட மோதாதே...

சீனாவைச் சேர்ந்த இந்தப் பூனையாரின் பெயர், ஏப்ருத்திஸ். இது தன் சக்திக்கு ஏற்றவாறு பொருளைத் தலையில் சுமக்கிறது.

அலுங்காமல்... குலுங்காமல்...

அலுங்காமல்... குலுங்காமல்...

கோகோ கோலா டின்களை தலையில் அடுக்கி வைத்தால், அத்தனை பாந்தமாக அலுங்காமல், குலுங்காமல் நடக்கிறது ஏப்ருத்திஸ்.

சுகமான சுமைகள்...

சுகமான சுமைகள்...

மொத்தத்தில், ஜேக்கும், ஏப்ருத்திஸ்ம் நல்ல ‘சுமை' தாங்கிகள் தான்....

English summary
This is probably the most talented dog ever. We don't know if he can fetch a bottle of beer for you, but he can balance one on his head! Jack, a three-year-old Australian cattle dog from San Francisco, is more than happy to hold anything from pans to books to an egg on top of his seemingly normal looking head -- sometimes while wearing a bow tie.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X